கம்பராமாயணம் 7868 · யுத்த 17.97
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கவிக்குலத் தலைவர் தாங்கின - குரங்குக் கூட்டத் தலைவர் தாங்கியனவாகிய, தடவரை - பெரிய மலைகளை; அடல் வலி நிருதர் - கொல்லும் வலிமை உடைய அரக்கர்; தம் அனிக ராசிமேல் - தம்முடைய சேனைத் தொகுதியின் மீது; விடவிட - விடுந்தோறும் விடுந்தோறும்; விசும்பிடை மிடைந்து வீழ்வன - (அவை) ஆகாயத்தில் நெருங்கிக் கடலில் வீழ்வனவாகி; படர் கடல் இனமழை படிவ போன்றவே - பரந்த கடலில் தொகுதியாக மேகக் கூட்டங்கள் படிந்திருப்பன போன்றன.
மழை - மேகம். தடவரை - உரிச் சொல் தொடர். தாங்கின - முற்றெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The great hills the monkey chiefs lifted up,
- hurled again and again on the massed ranks
- of the mighty, murderous demons, crowded the sky as they fell,
- like flocks of clouds settling down on the wide sea.
What the poem says
The monkey leaders keep launching great hills at the demon divisions. Thick in the air as they fall, the dark masses look like rain clouds coming down to drink from the broad ocean, a common image in Tamil poetry for clouds gathering water.