கம்பராமாயணம் 7869 · யுத்த 17.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அங்கும் இங்குமா - அங்கும் இங்கும் (ஓடி); அடிகளின் இழுக்கினர் நிருதரை - கால் வழுக்கியவர்களான அரக்கர்களை; உதிர ஆற்றினே - குருதி ஆற்றில்; மழுக்களும் அயில்களும், வாளும், தோள்களும் முழுக்கினர் - (அவர்களுடைய) மழுப்படைகளும் வேல்களும், வாளும்; (அவற்றைத் தாங்கிய) தோள்களும் (எனும் இவற்றை) முழுகுமாறு செய்தனர்; மூரி யாக்கையை உழக்கினர் - (அவர்களுடைய) வலிய உடம்பைக் கலக்கியவர்களாகி; ஒழுக்கினர் - (குருதியாற்றில்) செலுத்தினர்.
இழுக்குதல் - வழுக்குதல். முழுக்கினர் - மூழ்கச் செய்தனர். ஒழுக்கினர் - செலுத்தினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Running here and there, the demons slipped and lost their footing;
- and the monkeys plunged their axes, lances, swords and shoulders under,
- trampled and churned their huge bodies,
- and sent those demons drifting down the river of blood.
What the poem says
The battlefield has become slippery with blood. As the demons run about and lose their footing, the monkeys push them down, sinking their weapons and the arms that held them into the flood, crushing their great bodies and letting them be swept away on a river of blood.