கம்பராமாயணம் 7872 · யுத்த 17.101

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பாய்ந்தது நிருதர்தம் பரவை; பல்முறை
காய்ந்தது கடும்படை கலக்கி; கைதொறும்
தேய்ந்தது சிதைந்தது சிந்திச் சேண் உறச்
சாய்ந்தது தகைப்ப அரும் கவியின் தானையே.

பொருள் · Meaning in Tamil

நிருதர் தம் பரவை - அரக்கவீரர்கள் தம் படைக்கடல்; பல்முறை பாய்ந்தது - (குரங்குப் படைகளின் மீது) பலமுறை பாய்ந்து; கடும் படை கலக்கி காய்ந்தது - அக்கொடிய குரங்குப் படையைக் கலக்கிச் சினந்தது; தகைப் பெருங் கவியின் தானையே - (அவ்வளவில்) தகுதியுள்ள அப்பெரிய குரங்குப்படை; கைதொறும் தேய்ந்து சிந்திச் சிதைந்தது - அணி தோறும் (வலிமை) கெட்டுச் சிதறியது; சேண் உறச் சாய்ந்தது - நீண்ட தூரம் (வலிகெட்டு) ஓடியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sea of the demons surged forward; again and again
  2. it raged, throwing the fierce host into confusion; and in every division
  3. the great and worthy army of the monkeys wore away, broke up,
  4. scattered, and fell back far off.

What the poem says

Now the tide turns. The demon army, a sea in its own right, charges again and again and throws the monkey forces into disorder. Rank after rank of the monkeys loses strength, breaks and scatters, retreating a long way. This sets the scene for Ilakkuvaṉ's intervention.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāyntatu nirutartam paravai; pal muṟai
kāyntatu kaṭum paṭai kalakki; kaitoṟum
tēyntatu citaintatu cintic cēṇ uṟac
cāyntatu takaip peruṅ kaviyiṉ tāṉaiyē.