கம்பராமாயணம் 7874 · யுத்த 17.103

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நூல் மறைந்து ஒளிப்பினும் - சாத்திர நூல்கள் எல்லாம் மறைந்து போய் ஒளிந்து கொண்டாலும்; நுவன்ற பூதங்கள் மேல் மறைந்து ஒளிப்பினும் - (விவரித்துச்) சொல்லப்படுகிற ஐம்பெரும் பூதங்களும் (தமது) முதற்காரணமாகிய மூலப்பிரகிருதியில் இலயித்துப் புலனாகாது இருப்பினும்; விரிஞ்சன் வீயினும் - (படைப்புத் தொழில் செய்யும்) பிரமதேவன் அழிந்திட்டாலும்; கால் மறைந்து ஒளிப்பு இலாக் கடையின் - கால தத்துவம் (மட்டும்) மறைந்து ஒடுங்காது உள்ள ஊழி முடிவில், கண்ணகல் நான்மறை ஆர்ப்பென நடந்தது அவ்ஒலி - இடமகன்ற நான்மறைகளின் ஆரவாரம் போல் (இலக்குவன் வில்நாண்) ஒலி தோன்றி விளங்கியது.

யுகமுடிவுக் காலத்தில் கால தத்துவம் மட்டும் ஒடுங்காது நிற்க, பஞ்ச பூதங்களும் மூலப்பிரகிருதியில் இலயித்து நிற்கும் என்றும், அந்தப் பிரகிருதி பரம் பொருளுக்குத் திருமேனியாய் அமையும் என்றும், அப்போது வேதங்கள் பரம் பொருளைப் பேரொலியுடன் துதித்து நிற்கும் என்றும் கூறியவாறு. இலக்குவன் எழுப்பிய வில் நாண் ஒலியால் அரக்கர் ஆரவாரமும், வீரமும் இல்லாமல் போய், அந்நாணின் ஒலியே எங்கும் வியாபித்திருந்ததை இவ்வாறு கூறினார். விரிஞ்சன் - பிரமன், கால் - காலதத்துவம்; கடைக்குறை. நுவன்ற - பெயரெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the roar of the four wide Vedas at the end of an age,
  2. when the sacred books have vanished and hidden away,
  3. when the elements spoken of have vanished and hidden above, when Viriñcaṉ has perished,
  4. and only Time remains, not vanished or hidden, so that sound went forth.

What the poem says

The twang of Ilakkuvaṉ's bowstring is compared to a cosmic event. At the dissolution of the universe, the scriptures disappear, the five elements merge back into primal matter, and even Viriñcaṉ (Piramaṉ the creator) perishes; Time alone remains, and the Vedas loudly praise the Supreme.

In the same way, the sound of the bow drowns out every other noise and courage of the demons, and fills everything by itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūl maṟaintu oḷippiṉum nuvaṉṟa pūtaṅkaḷ
mēl maṟaintu oḷippiṉum viriñcaṉ vīyiṉum
kāl maṟaintu oḷippu ilāk kaṭaiyiṉ kaṇ akal
nāṉmaṟai ārppeṉa naṭantatu av oli.