கம்பராமாயணம் 7876 · யுத்த 17.105

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1யானையின் கரம் துமித்து இரத வீரர்தம்
வான் உயர் முடித் தலை தடிந்து வாசியின்
கால் நிரை அறுத்து வெம் கறை கண் மொய்ம்பரை
ஊன் உடை உடல் பிளந்து ஒடும் அம்புகள்;

பொருள் · Meaning in Tamil

அம்புகள் - (இலக்குவன் எய்த) அம்புகள்; யானையின் கரம் துரந்த - யானைகளின் துதிக்கைகளை அறுத்தும்; இரத வீரர் தம் வான் உயர் முடித்தலை தடிந்து - தேர் வீரர்களின் மிக உயர்ந்த முடியொடு கூடிய தலைகளை வெட்டியும்; வாசியின் கால் நிரை அறுத்து - குதிரைகளின் கால் வரிசைகளை அறுத்தும்; வெங்கறைக் கண் மொய்ம்பரை - கொடிய குருதிக் கண்கொண்ட வலிய அரக்கரின்; ஊனுடை உடல் பிளந்து ஒடும் - தசையைக் கொண்ட உடல்களைப் பிளந்து ஓடின.

இலக்குவன் எய்த அம்புகள் நால்வகைப் படைகளையும் அழித்தமை கூறினார். வாசி - குதிரை, கறைக்கண் - குருதிக்கண், முடித்தலை - மூன்றாம் வேற்றுமைத் தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The arrows severed the elephants' trunks,
  2. cut off the sky-high crowned heads of the chariot warriors,
  3. sliced through the rows of the horses' legs,
  4. and split open the fleshy bodies of the strong, cruel, blood-eyed ones as they sped on.

What the poem says

Ilakkuvaṉ's arrows destroy all four divisions of the demon army: they cut off the trunks of the elephants, behead the crowned chariot fighters, lop the legs of the horses, and tear through the bodies of the red-eyed foot soldiers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yāṉaiyiṉ karam turanta irata vīrartam
vāṉ uyar muṭit talai taṭintu vāciyiṉ
kāl nirai aṟuttu vem kaṟaikkaṇ moymparai
ūṉuṭai uṭal piḷantu oṭum ampukaḷ;