கம்பராமாயணம் 7879 · யுத்த 17.108

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கனலும் கண்ணன கண்டகர் நெடுந்தலை - (இலக்குவனால் அறுத்து வீழ்த்தப்பட்ட) நெருப்பை வெளிக்காலும் கண்களை உடையனவாகிய கொடிய அரக்கர்களின் பெரிய தலைகள்; துண்ட துணை வெண்பிறை கவ்வி - துண்டுபட்ட இரண்டு வெண்பிறை மதியைக் கவ்விக்கொண்டு; தூக்கிய குண்டல மீன்குலம் தழுவி - (காதில்) தொங்குகிற குண்டலங்களாகிய விண்மீன் கூட்டங்களை உடன் சேர்த்துக் கொண்டு; கோள் மதி மண்டலம் மண்ணினே விழுந்தன போன்றன - கோள்களோடு கூடிய சிறப்புடைய மண்டலம் நிலத்தில் விழுந்தன போன்றன.

கனலும் கண் - செவ்வானம், வளைந்த பற்கள் - துண்டு பட்ட பிறை. காதில் உள்ள குண்டலம் - விண்மீன் கூட்டம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great heads of the wicked ones, with eyes that blazed,
  2. gripping in their teeth a pair of broken white crescents,
  3. and clasping the clusters of stars that were their hanging earrings,
  4. lay on the earth like the orb of the moon with its planets fallen down.

What the poem says

The severed heads of the demons, struck off by Ilakkuvaṉ, lie on the ground. Each one is a whole fallen sky: the fiery eyes are like the red sky of evening, the curved fangs like two pieces of a broken crescent moon, and the dangling jewelled earrings like clusters of stars. It looks as if the moon and its company of heavenly bodies had dropped to earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭakar neṭun talai kaṉalum kaṇṇaṉa
tuṇṭa veṇ piṟait tuṇai kavvi tūkkiya;
kuṇṭala mīṉ kulam taḻuvi kōḷ mati
maṇṭalam viḻuntaṉa pōṉṟa maṇṇiṉē.