கம்பராமாயணம் 788 · பால 12.50

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"இளைக்கலாத கொங்கைகாள்! எழுந்து விம்மி என் செய்தீர்?
முளைக் கலா மதிக் கொழுந்து போலும் வாள் முகத்தினான்,
வளைக்கலாத வில் கை யாளி, வள்ளல், மார்பின் உள் உறத்
திளைக்கல் ஆகும் ஆகில், ஆன செய் தவங்கள் செய்ம்மினே!"

பொருள் · Meaning in Tamil

இளைக்கலாத - இளைக்காது பருத்து வரும்; கொங்கைகாள் - தனங்களே; எழுந்து விம்மி - (நீங்கள்) மேன்மேல் எழுந்து பருத்து வருதலால்; என் செய்வீர் - என்ன காரியத்தைச் சாதித்து விடுவீர்?; முளைக்கலா - வானில் தோன்றாத; மதிக் கொழுந்து போலும் - என்றும் ஒரு தன்மைத்தாயுள்ள சந்திரனைப் போன்ற; வாள் முகத்தினான் - ஒளியுள்ள முகத்தை யுடையவனும்; வளைக்கலாத வில் - (யாராலும்) வளைக்கமுடியாதபடி அரிதான வில்லை; கை ஆளி வள்ளல் - கையில் ஏந்தியவனுமாகிய அருள்மிக்க அவனுடைய; மார்பினுள் - திருமார்பை; உறத் திளைக்கலாகும் ஆகில் - இறுகத் தழுவக் கூடிய வழி ஏற்படுமாயின்; ஆன செய்தவங்கள் - அதற்கேற்ப செய்யத் தக்க தவங்களை; செய்ம்மினே - செய்யுங்கள்.

“கொங்கை முளைத்தெழுவதன் பயன் அவனது மார்பைத் தழுவிக் கொள்ளுதலேயாகும். அந்த நிலை கிடைப்பதற்கான வழி இருந்தால் அதைச் செய்யுங்கள். அதைவிட்டு நீங்கள் எழுந்து விம்முவதால் பயன் எதுவுமில்லை” என்று சீதை கூறுகிறாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Breasts that never grow less, what will you gain by rising and swelling?
  2. He whose bright face is like a sprout of moon that never rises in the sky,
  3. the generous one whose hand holds a bow no one could bend: if, deep in his chest,
  4. you may sink and lose yourselves, then do whatever penance it takes!'

What the poem says

Cītai addresses her own breasts, swelling with desire. Swelling achieves nothing, she tells them; their only purpose is to be pressed against the chest of the man she loves, whose face is like a moon that never wanes and whose hand bears a bow no one else could bend.

If there is any way to win that embrace, let them perform whatever austerities it requires, rather than heaving uselessly.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"iḷaikkalāta koṅkaikāḷ! eḻuntu vimmi eṉ ceyvīr?
muḷaikkalā matikkoḻuntu pōlum vāḷ mukattiṉāṉ,
vaḷaikkalāta viṟ kaiyāḷi, vaḷḷal, mārpiṉ uḷḷuṟat
tiḷaikkal ākumākil, āṉa cey tavaṅkaḷ ceymmiṉē!"