கம்பராமாயணம் 789 · பால 12.51

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து? என் நெஞ்சு உலாய்
அங்கி என்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கைமேல் விடம் பொழிந்தது என்னினும்
கங்குல்வந்த திங்கள் அன்று, அகம் களங்கம் இல்லையே!"

பொருள் · Meaning in Tamil

என் நெஞ்சு - எனது மனத்திலே; உலாவந்து - உலாவி வந்து; அங்கு - அந்த இடத்திலே; இயன்று - அச்செயலோடு பொருந்தி; அனங்கன் எய்த - மன்மதன் செலுத்திய; அம்பின் வந்த - அம்பினால் உண்டான; சிந்தைநோய் - மன நோயானது; பொங்குகின்ற - பெரிதும் வெளிப்படும் இடமான; கொங்கைமேல் - (என்) தனங்கள்மேல்; விடம் பொழிந்தது - நஞ்சினை ஊற்றியது; என்னினும் - என்றாலும்; கங்குல் வந்த - (இது) நேற்றிரவில் தோன்றி வருந்திய; திங்கள் அன்று - சந்திரன் அன்று; அகம் - (ஏனென்றால்) இதன் மத்தியில்; களங்கம் இல்லை - களங்கம் காணப்படவில்லை; இந்த இந்து - இந்தச் சந்திரன்; எங்கு நின்று - எங்கிருந்து; எழுந்தது - வந்ததோ? (தெரியவில்லை)

உரு வெளிப்பாட்டில் இராமனது முகச் சந்திரன் தோன்ற அதனால் உண்டான துயரத்தைச் சீதை வெளிப்படுத்துகிறாள். அவள் முகச்சந்திரனைப் பார்த்து இது நஞ்சு பொழிந்ததனாலும் நடுவிலே களங்கத்தைப் பெறவில்லை ஆதலாலும் இது நேற்றிரவு தோன்றிய சந்திரன் அன்று; இந்தச் சந்திரன் இரவு அல்லாத இப்போது எவ்வாறு தோன்றியதோ என்று வருந்துகின்றாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'From where has this moon risen and come? Wandering through my heart,
  2. working its way there, the heartache born of the arrows Anaṅkaṉ shot
  3. has poured poison on my swelling breasts; and yet
  4. this is not the moon that came last night, for it has no stain at its heart!'

What the poem says

In her longing Cītai has a vision of Irāmaṉ's face, and it hangs before her like a moon. It torments her, pouring poison on her as the moon did all night.

Yet it cannot be last night's moon: it is daytime, and this moon has no dark mark at its centre. She wonders where this flawless moon has come from, not realising, or half-realising, that it is the face of the man she loves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"eṅku niṉṟu eḻuntatu inta intu vantu? eṉ neñcu ulāy
aṅku iyaṉṟu aṉaṅkaṉ eyta ampiṉ vanta cintai nōy
poṅkukiṉṟa koṅkaimēl viṭam poḻintatu eṉṉiṉum
kaṅkul vanta tiṅkaḷ aṉṟu, akam kaḷaṅkam illaiyē!"