கம்பராமாயணம் 790 · பால 12.52

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உள்ளமே - என் மனமே; அனங்கன் - மன்மதன்; நெஞ்சு அழன்று - மனம் கொதிக்குமாறு; அடர்ந்து வந்து - நெருங்கி வந்து; சிந்தும் அம்பு எனும் விடம் - நஞ்சு தோய்ந்த அம்பு; குடைந்த - குடைதலினால்; மெய்யின் நின்று - உடம்பினுள் நிலைத்து; வெந்திடாது எழுந்து - வெந்தழியாமல் வெளிப்பட்டு; வெங்கடம் துதைந்த - வெப்பமான மதநீர் பெருகும்; காரி யானை அன்ன - கறுத்த யானையைப் போன்ற; காளை தாள் அடைந்து - காளை போன்ற பிரானுடைய திருவடிகளைச் சரணடைந்து; உடன் தொடர்ந்துபோன - அவனோடு தொடர்ந்து சென்ற; ஆவி - என் உயிரானது; வந்தவா - திரும்பி வந்த விதம்; என் - என்னவோ?

“அனங்கன் எய்த அம்பால் வெந்த உடம்பிலிருந்து தான் வேகாதிருக்கத் தப்பி வந்த என்னுயிர் தொடர்ந்து சென்று இராமன் திருவடியைச் சரணடைந்தும் இப்போது துன்பப் படுமாறு திரும்பிவந்ததே! இது வியப்பாக உள்ளது” என்று இரங்கிக் கூறுகிறாள் சீதை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Pressing close, Anaṅkaṉ shot arrows that scorch the heart; from the body
  2. those poisoned shafts bored through, my life rose up unburnt and, going
  3. to the feet of that bull of a man, like a black elephant streaming hot must,
  4. followed close behind him: how is it, my heart, that it has come back?'

What the poem says

Cītai speaks to her own heart. When the love god's poisoned arrows set her body burning, her life escaped before it too could burn, and ran after Irāmaṉ, who is as majestic as a great black elephant in rut, to take refuge at his feet.

Having found such a refuge, why has her life come back to suffer here? She marvels bitterly that she is still alive at all.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"aṭarntu vantu aṉaṅkaṉ neñcu aḻaṉṟu cintum ampu eṉum
viṭam kuṭainta meyyiṉniṉṟu ventiṭātu eḻuntu, veṅ
kaṭam tutainta kāri yāṉai aṉṉa kāḷai tāḷ aṭaintu
uṭaṉtoṭarntu pōṉa āvi, vantavā eṉ? uḷḷamē!"