கம்பராமாயணம் 7883 · யுத்த 17.112
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆறு எண்ணாயிரம் வீடிய பொழுது - பதினாலாயிரம் பேர் இறந்தபொழுது; ஒன்று கவந்தம் ஆடுவ எனும் - ஒரு கவந்தம் ஆடும் என்ற; பனுவல் மெய்யதேல் - நூல் கொள்கை உண்மையாக இருக்கும் ஆனால்; குனித்த கோடியின் மேல் உள - (அப்போரில்) ஆடிய (கவந்தங்கள்) கோடிக்கு மேல் உள்ளன (என்றால்); கொற்றவன் பாடு இனி ஒருவரால் பகரற் பாலதோ - வெற்றியுடைய இலக்குவனுடைய பெருமையை இனி ஒருவரால் சொல்ல முடியுமோ.
பாடு - பெருமை. ஆறு எண்ணாயிரம் - நாற்பத்து எட்டாயிரம் எனவும் கூறுவர். ஆறு எண்ணாயிரம் - உம்மைத் தொகை, பண்புத் தொகை எனினும் இழுக்காது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If the treatise is true that says one headless trunk
- dances when six and eight thousand have perished,
- then more than a crore danced here; can the might
- of the victorious one now be told by anyone?
What the poem says
The poet calculates the slaughter. A traditional text held that a single headless corpse rises to dance only after a vast number of warriors have fallen, fourteen thousand on one reading of "six and eight thousand", forty-eight thousand on another.
Since more than a crore (ten million) of such trunks danced in this battle, Ilakkuvaṉ's prowess is beyond anyone's power to describe.