கம்பராமாயணம் 7885 · யுத்த 17.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய ஆக்கைய - (தங்களைத்) தாக்கிய (இலக்குவனது) அம்புகளால் தலைகள் நீங்கிய உடல்களை உடைய; அரக்கர் நோன் பிணம் - அரக்கர்களின் வலிமை உள்ள பிணங்கள்; புரசையோடு அணைந்த தாளன - யானையின் கழுத்தில் கட்டிய கயிற்றொடு சேர்ந்த கால்களை உடையனவாய்; மேக்கு உயர் அங்குசக்கைய - மேலே உயர்ந்த அங்குசத்தைக் கொண்ட கைகளை உடையனவாய்; வெங்கரி நூக்குவ கணிப்பு இல - கொடிய யானைகளைச் செலுத்துவன எண்ணில்லாதன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their bodies headless from the arrows that struck them,
- their feet still tangled in the neck ropes,
- their hands still raising high the goads,
- countless strong demon corpses still drove the fierce elephants on.
What the poem says
Even after Ilakkuvaṉ's arrows have struck off their heads, many of the demon elephant drivers stay seated, their feet still hooked in the ropes around the elephants' necks and their goads still raised. Countless headless corpses seem to go on driving their war elephants forward.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tākkiya caraṅkaḷiṉ talaikaḷ nīṅkiya
ākkaiya puracaiyōṭu aḷainta tāḷaṉa
mēkku uyar aṅkucak kaiya veṅ kari
nūkkuva kaṇippu ila arakkar nōṉ piṇam.