கம்பராமாயணம் 7886 · யுத்த 17.115

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கோள் உடை கணைபட புரவி கூத்து அயர்
தோளுடை நெடுந்தலை துமிந்தும் தீர்கில
ஆளுடைக் குறைத்தலை அதிர ஆடுவ
வாளுடைத் தடக்கைய வாசி மேலன.

பொருள் · Meaning in Tamil

கோளுடைக் கணைபட - (இலக்குவனது) கொல்லும் தன்மை உள்ள அம்புகள் பட்டதனால்; தோளுடை நெடுந்தலை துமிந்தும் - தோளுக்கு மேல் உள்ள நெடிய தலைகள் வெட்டப்பட்டும்; வாளுடைத் தடக்கைய - வாளை ஏந்திய பெரிய கைகளை உடையனவான; வாசி மேலன ஆளுடைக் குறைத்தலை - குதிரைகளின் மேல் உள்ள வீரர்களின் தலையற்ற உடற்குறைகள்; புரவி கூத்தன - குதிரைகள் ஆடிய ஆட்டத்திற்கு ஏற்ப; தீர்கில அதிர ஆடுவ - நீங்காது அதிர்ந்து ஆடுவன ஆயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the deadly arrows struck, to the dance of the horses,
  2. though the tall heads above their shoulders were cut off, without falling away,
  3. the headless trunks of the riders shook and danced,
  4. great hands still holding swords, there upon the horses.

What the poem says

The same strange sight among the cavalry: the riders have lost their heads to Ilakkuvaṉ's arrows, yet the bodies do not fall. With swords still in their hands, they jolt and sway on horseback in time with the plunging of the horses, as if dancing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōḷuṭaik kaṇai paṭa puravi kūttaṉa
tōḷuṭai neṭun talai tumintum tīrkila
āḷuṭaik kuṟaittalai atira āṭuva
vāḷuṭait taṭak kaiya vāci mēlaṉa.