கம்பராமாயணம் 7889 · யுத்த 17.118
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தூண்டு அருங்கணை பட - தூண்டுதல் இல்லாமல் மேலும் மேலும் பாயும் தன்மை உள்ள அம்புகள் பட்டதால்; துமிந்து துள்ளிய - வெட்டுண்டு துள்ளிய; தீண்ட அரு நெடுந்தலை - (கைகளால்) தீண்டுதற்கு அரிய (அரக்கரது) பெரிய தலைகளை; தழுவிச் சேர்ந்தன எருவை - நெருங்கிச் சேர்ந்தனவாகிய எருவைகள்; பூண்டு எழு கரதலம் பொறுக்கலாதன - தாம் மேல் (பறந்து) எழுவதற்குரிய கரங்களை (சிறகுகளைப்) பெற்றிராதவையான; ஆண்டலை நிகர்த்தன ஆடுவ - ஆண்டலை என்னும் பறவையை ஒத்து ஆடுவனவாயின.
ஆண்டலை - ஆண் மகனது தலை போன்று தலையுடைய ஒரு பறவை. எருவை - பருந்து, தலை வெளுத்து உடல் சிவந்துள்ள பருந்து வகை என்பாருமுளர். ஆண்டலைப் பறவை சிறகுகள் இல்லாதது என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Struck by arrows that need no urging, the great heads,
- once untouchable, leapt as they were severed; the kites that clung to them,
- lacking the hands that could lift them as they rose,
- danced about looking like āṇṭalai birds.
What the poem says
Kites swoop down on the severed demon heads that are leaping about on the field and cling to them. Weighed down and unable to fly off with them, they hop and flap on the ground.
A kite with a human head in its grip resembles the āṇṭalai, a fabulous bird said to have a man's head and to be without wings.