கம்பராமாயணம் 7890 · யுத்த 17.119
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயிரம் ஆயிரம் கோடியாய் வரும்
தீ உமிழ் கடுங் கணை மனத்திற் செல்வன
பாய்வன புகுவன; நிருதர் பல் உயிர்
ஓய்வன நமன் தமர் கால்கள் ஓயவே.
பொருள் · Meaning in Tamil
ஆயிர ஆயிர கோடியாய் வரும் - பல ஆயிரம் கோடியாய் வருகின்றனவான; தீ உமிழ் நெடுங்கணை - தீயைக் கக்குகின்ற நீண்ட அம்புகள்; மனத்தின் செல்வன பாய்வன - மனம் போல விரைந்து சென்று பாய்வனவாய்; புகுவன - (பகைவர்) உடலில் புக; நிருதர்பல் உயிர் - (அதனால்) அரக்கர்களின் பல உயிர்கள்; நமன் தமர் கால்கள் ஓயவே ஓய்வன - யமனுடைய உறவினர்களின் கால்கள் ஓயுமாறு ஒழிவனவாயின.
அம்புகளின் வேகத்திற்கு மனம் உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Coming in thousands upon thousands of crores,
- the long fire-spitting arrows, speeding like thought,
- leapt and entered; and the many lives of the demons came to an end
- till the legs of Yama's servants were worn out.
What the poem says
Ilakkuvaṉ's arrows, numberless and fiery, fly as fast as thought and bury themselves in the demons. So many lives are ended that Yama's messengers, who must carry away the souls of the dead, are run off their feet.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyira āyira kōṭiyāy varum
tī umiḻ neṭuṅ kaṇai maṉattiṉ celvaṉa
pāyvaṉa pukuvaṉa; nirutar pal uyir
ōyvaṉa namaṉ tamar kālkaḷ ōyavē.