கம்பராமாயணம் 7891 · யுத்த 17.120
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மேருவைத் துளக்குவார் - மேரு மலையையும் அசைக்கும் பேராற்றல் படைத்த அரக்கர்; விளக்கு வான் கணைகளால் விளிந்து - ஒளி விடுகிற சிறந்த (இலக்குவனுடைய) அம்புகளால் இறந்து; உடற் பொறை துணிந்து துள்ளுவார் - உடல் ஆகிய பெருஞ்சுமை துண்டாகித் துடித்தனர்; அமரர் தம் சிரத்தை இளக்குவார் - (அப்பெருஞ் செயல் கண்டு) தேவர்கள் தங்கள் தலையை அசைப்பாராயினர்; ஏன் - அதற்கு மேலும் என்ன; பிணத்தின் ஓங்கலால் நிலமகள் முதுகு உளுக்குவாள் - பிணத்தின் மலை போன்ற குவியலின் பாரம் தாங்காது நில மடந்தை முதுகு நெளிந்தாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who could shake Mount Mēru died by the bright, fine arrows;
- the burdens of their bodies were cut apart and they writhed;
- the gods shook their heads in wonder; and what more,
- the Earth goddess strained her back under the mountains of corpses.
What the poem says
Demons strong enough to rock Mount Mēru are cut to pieces by Ilakkuvaṉ's gleaming arrows. The gods watching from heaven nod their heads in amazement, and the goddess of the Earth, bearing the heaped-up dead, bends and twists her back under the weight.