கம்பராமாயணம் 7897 · யுத்த 17.126

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆண்டு அதிகாயன் தன் சேனை ஆடவர்
ஈண்டின மத கரி ஏழ் எண்ணாயிரம்
தூண்டினர் மருங்கு உறச் சுற்றினார்; தொகை
வேண்டிய படைக்கலம் முறையின் வீசுவார்.

பொருள் · Meaning in Tamil

ஆண்டு அதிகாயன் தன் சேனை ஆடவர் - அப்போது அதிகாயனுடைய படை வீரர்கள்; ஈண்டின மதகிரி ஏழ் - எண்ணாயிரம் தூண்டினர் - நெருங்கிய மதமலை போன்ற களிறுகள் ஐம்பத்தாறாயிரத்தைத் தூண்டி; மருங்கு உறச் சுற்றினார் - (இலக்குவனைப்) பக்கங்களில் பொருந்த வளைத்துக்கொண்டு; தொகை வேண்டிய படைக்கலம் மழையின் வீசுவார் - தொகையாக விரும்பிய படைக்கருவிகளை மழை போல (மிகுதியாக) வீசுவாராயினர்.

ஏழ் - எண்ணாயிரம் - பண்புத் தொகை. இன் - உவம உருபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then the warriors of Atikāyaṉ's army
  2. drove forward seven times eight thousand rutting elephants packed close,
  3. and closed in around him on every side;
  4. and they hurled weapons of every kind they wished, like rain.

What the poem says

Atikāyaṉ's own troops now attack. They urge forward fifty-six thousand ("seven times eight thousand") war elephants in rut and encircle Ilakkuvaṉ, raining down weapons of every sort upon him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇṭu atikāyaṉtaṉ cēṉai āṭavar
īṇṭiṉa matakari ēḻ eṇṇāyiram
tūṇṭiṉar maruṅku uṟac cuṟṟiṉār; tokai
vēṇṭiya paṭaikkalam maḻaiyiṉ vīcuvār.