கம்பராமாயணம் 7898 · யுத்த 17.127
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
போக்கு இலா வகை புறம் வளைத்துப் பொங்கினார் - (அரக்கர்கள்) (குரங்குப் படை வீரர்கள்) தப்பிப் போக முடியாதபடி பக்கங்களை எல்லாம் வளைத்துக் கொண்டு சினம் மிக்கவராய்; திசை தொறும் தாக்கினார் - (எல்லாத்) திசைகளிலும் தாக்கினார்கள்; தடக்கை மால் வரை நூக்கினார் - (அந்த வானரப் படைகளின் மீது) பெரிய கைகளை உடைய மயக்கம் கொண்ட மலை போன்ற யானைப் படையைச் செலுத்தினார்கள்; கவிகள் தம் குழுவை படைகளால் நுறுக்கினார் - (மேலும்) வானரக் குழுவைத் தங்கள் படைகளால் துண்டாக்கினார்; குழம்பு ஆக்கினார் ஆர்ப்பினார் - (அதற்கு மேல் அவற்றைக்) குழம்பாக்கி ஆரவாரம் செய்தனர்.
பொங்கினார் - முற்றெச்சம், தடக்கை - உரிச்சொல் தொடர். மால் வரை - அடையடுத்த உவமையாகு பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They surged around them so that there was no way out,
- attacked from every direction, drove on the great hill-like
- elephants with their huge trunks, smashed the monkey troops with their weapons,
- pounded them to pulp, and roared.
What the poem says
The demons hem the monkey army in on all sides so that none can escape, attack from every quarter and drive their huge, maddened elephants into them. They hack the monkeys with weapons and crush them to a pulp, shouting in triumph.