கம்பராமாயணம் 7899 · யுத்த 17.128

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எறிந்தன - (வானரர்கள்) எறிந்தனவாகிய (மலைகளும்); எய்தன - (அரக்கர்கள்) எய்தனவாகிய பல்வகைப் படைக் கலங்களும்; எய்தி ஒன்றோடு ஒன்று அறைந்தன - நெருங்கி ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன; அசனியின் விசையின் ஆசைகள் நிறைந்தன - (அதனால்) இடி போன்ற வேகமான முழக்கம் திசைகள் தோறும் நிறைந்தன; மழை என நெருங்கி நிற்றலால் - (அந்த எறிந்தனவும் எய்தனவும்) மேகக் கூட்டம் போல நெருங்கி (வானத்தில்) நிற்றலால்; உலகொடு திசையும் வானமும் மறைந்தன - உலகமும் திசைகளும் வானமும் மறைந்தன.

அசனி - இடி, ஆசை - திசை, மழை - மேகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The things hurled and the things shot met and struck
  2. one against the other; with the force of thunderbolts the quarters
  3. were filled; and as they stood crowded like clouds,
  4. the earth, the directions and the sky were all hidden.

What the poem says

The hills thrown by the monkeys and the weapons shot by the demons collide in mid-air with a noise like thunder that fills every direction. So thick are they, massed like rain clouds, that earth, sky and the horizons vanish from view.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṟintaṉa eytaṉa eyti oṉṟoṭu oṉṟu
aṟaintaṉa acaṉiyiṉ vicaiyiṉ ācaikaḷ
niṟaintaṉa maḻai eṉa nerukki niṟṟalāl
maṟaintaṉa ulakoṭu ticaiyum vāṉamum.