கம்பராமாயணம் 7901 · யுத்த 17.130

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒருகணை சென்று அரிதர - (இலக்குவன் உடைய) ஒரு கணை (விரைந்து) சென்று அறுப்பதனால்; குன்று அன மதகரி - மலையைப் போன்ற மதங்கொண்ட களிறுகள்; ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் - ஒன்று மட்டும் அல்லாது ஒருபதும் ஒன்பதுமாக; கொம்பொடு கரம் அற - கொம்புகளும் துதிக்கைகளும் அறுபட; வன்தலை துமிதர - வலிய தலைகள் துண்டிக்கப்பட; மஞ்சு என மறிவன - மேகம் போல் விழுந்து கிடப்பன; மதமலை மழை சிந்துவ - மதத்தை உடைய மலையை ஒத்த (அக்) களிறுகள் மழை போல மதநீரைச் சிந்துவன வாயின.

அன - இடக்குறை (உவமஉருபு). மதமலை - அடையடுத்த உவமையாகுபெயர். இப்பாடலில் குறில் எழுத்துக்கள் மிகுதியும் வருதலால் இது குறுஞ்சீர் வண்ணப் பாடலாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hill-like rutting elephants, their tusks and trunks cut off
  2. and their strong heads severed, toppled like clouds,
  3. not one but ten and nine of them, as a single arrow
  4. went through and sliced them; those rutting hills shed rain.

What the poem says

The metre changes to a fast, rhythmic form built mostly of short syllables, matching the speed of the fighting.

A single arrow of Ilakkuvaṉ passes through nineteen elephants at once, cutting off their tusks, trunks and heads. They roll over like dark clouds, and the ichor still pouring from them is like the rain that clouds let fall.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṉṟu aṉa matakari kompoṭu karam aṟa
vaṉ talai tumitara mañcu eṉa maṟivaṉa
oṉṟu ala; orupatum oṉpatum oru kaṇai
ceṉṟu aritara maḻai cintuva matamalai.