கம்பராமாயணம் 7903 · யுத்த 17.132
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கதமலை கனல்வன - சீற்றத்தை மலை போல் கொண்டனவாகிய யானைகள்; உருமினும் வலியன வடிகணை - இடியைக் காட்டிலும் வலிமை உடைய கூர்மையான கணைகள்; நுழைவன - நுழையப் பெற்றவை ஆகி; பருமமும் - யானையின் கழுத்தில் இடப்படும் கயிறும்; முதுகு இடு படிகையும் - முதுகில் இடப்படும் தவிசும் (அம்பாரி); வலிபடர் மருமமும் அழிபட - வலிமை பொருந்திய மருமத்தானமும் அழிந்து பட; திசை திசை உருள்வன - திக்குகளில் எல்லாம் உருண்டு; கருமலை நிகர்வன - கருநிறம் உள்ள மலைகளை ஒத்தன.
பருமம் - யானையின் கழுத்தில் இடப்படும் கயிறு. (புரசையுமாம்). படிகை - யானையின் முதுகின் மீது இடப்படும் தவிசு; அம்பாரி. மருமம் - உயிர் நிலை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that girth ropes, the howdahs set on their backs, and the vital spots
- where their strength resides were destroyed, the sharp arrows,
- stronger than thunder, went in; and the raging, burning elephants
- rolled in every direction, like black hills.
What the poem says
Ilakkuvaṉ's arrows, stronger than thunderbolts, pierce the furious elephants, cutting through their neck ropes and the howdahs on their backs and striking their vital points. The great beasts roll over in every direction like black mountains.