கம்பராமாயணம் 7904 · யுத்த 17.133

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இறுவன கொடியவை எறிவன இடை இடை
துறுவன சுடுகணை துணிவன மதகரி;
அறுவன அவை அவை கடவினர் அடி தலை;
வெறுமைகள் கெடுவன விழி குழி கழுதுகள்.

பொருள் · Meaning in Tamil

எரிவன இடை இடை துறுவன சுடுகணை - (இலக்குவன் எய்த) எரியுந்தன்மை வாய்ந்தவையும், இடை இடையே (இலக்குகளைத்) தேடுகின்றவையுமாகிய சுடுகணைகள்; கொடியவை இறுவன - (யானை மீது உள்ள) கொடிகளைத் துண்டு படுத்தின; மதகரி துணிவன - (மேலும் அவை) மதங்கொண்ட யானைகளைத் துண்டுபடுத்தின; அவை அவை கடவினர் தடிதலை அறுவன - (அதற்கு மேல்) அவ்வவற்றைச் செலுத்திய பாகர்களின் தடித்த தலையை அறுத்தன; விழி குழி கழுதுகள் வெறுமைகள் கெடுவன - (அதனால்) குழிகள் பேய்களின் (உணவில்லாத) வெறுமை நிலை கெடுவனவாயின.

கழுது - பேய். துறுதல் - நெருங்கிச் செறிதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The burning arrows, hurled and crowding in here and there,
  2. snapped the banners and cut the rutting elephants apart;
  3. they severed the heavy heads of those who drove each one;
  4. and the emptiness of the hollow-eyed ghouls was ended.

What the poem says

Ilakkuvaṉ's blazing arrows pack the air, cutting the flags on the elephants, the elephants themselves and the heads of their drivers.

The verse closes grimly: the hollow-eyed ghouls of the battlefield, always hungry, finally have their fill of flesh.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟuvaṉa koṭiyavai eṟivaṉa iṭai iṭai
tuṟuvaṉa cuṭu kaṇai tuṇivaṉa matakari;
aṟuvaṉa avai avai kaṭaviṉar taṭi talai;
veṟumaikaḷ keṭuvaṉa viḻi kuḻi kaḻutukaḷ.