கம்பராமாயணம் 7907 · யுத்த 17.136

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கால் சில துணிவன; கரம் அறுவன; கதழ்
வால் சில துணிவன; வயிறுகள் வெளிபட
நால் சில குடரன; நகழ்வன சில வரு
தோல் சில கணை பல சொரிவன மழையன.

பொருள் · Meaning in Tamil

மழை என கணை பல சொரிவன - மழை போல் (இலக்குவன்) அம்புகள் பலவற்றைச் சொரிந்ததனால்; வருதோல் - போருக்கு வந்த யானைகளில்; கால் துணிவன சில - சிலகால் அறுபட்டவை; கரம் அறுவன சில - சில துதிக்கைகள் துணியுண்டவை; கதழ் வால்துணிவன சில - சில விரைவாக வீசும் வால் இழந்தவை; வயிறுகள் வெளிபட நால்குடர் சில - சில வயிறுகள் பிளந்ததனால் வெளித் தொங்குகின்ற குடலை உடையன; நகழ்வனசில - அழுந்தி வருந்தியவை சில.

தோல் சில எனவரும் சில என்பதை கரம் அறுவன என்ற தொடரோடு இயைத்துப் பொருள் காண்க. நகழ்வன - அழுந்தி வருந்தின, தோல் - யானை. குடர் - கடைப்போலி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some had their legs cut off; some lost their trunks; some
  2. had their lashing tails cut through; some, their bellies burst,
  3. trailed their entrails; some of the elephants that came
  4. sank down in pain, as many arrows poured like rain.

What the poem says

Ilakkuvaṉ's arrows rain down on the advancing elephants and maim them in every way: legs and trunks severed, swishing tails cut off, bellies split open so that the guts hang out. Others simply sink down crushed and suffering. The verse lists the injuries in a quick, staccato rhythm.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāl cila tuṇivaṉa; karam aṟuvaṉa; kataḻ
vāl cila tuṇivaṉa; vayiṟukaḷ veḷi paṭa
nāl cila kuṭar aṉa; nakaḻvaṉa cila varu
tōl cila kaṇai pala corivaṉa maḻai eṉa.