கம்பராமாயணம் 7913 · யுத்த 17.142

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உள் நின்று அலை அலைநீர் உக இறுதிக் கடை உறு கால்
எண்ணின் தலை நிமிர்கின்றன இகல் வெங்கணை, இரணப்
பண்ணின் படர் தலையில் பட, மடிகின்றன பல ஆம்,
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்தன மதமா.

பொருள் · Meaning in Tamil

உள் நின்று அலை கடல் நீர் உக - தன் எல்லைக்குள் கட்டுப் பாட்டில் நின்று வீசுகின்ற அலைகளை உடைய கடல் நீர் பெருகி வருமாறு; இறுதிக் கடை உறுகால் - யுக முடிவுக் காலத்தில் வீசும் பெருங்காற்றைப் போல; எண்ணின் தலை நிமிர்கின்ற இகல் வெங்கணை - அளவுக்குரிய எல்லை கடந்து வருகின்றவையாகிய (இலக்குவனின்) வலிய கொடிய அம்புகள்; இரணப் பண்ணின் படர் தலையில் பட - பொன்னால் இயன்ற அலங்காரத்தை உடைய பரந்த மத்தகத்தில் படுதலால்; மழை ஒத்தன மதமா - மேகத்தை ஒத்த மதங் கொண்ட யானைகள்; மண்ணின் தலை உருள்கின்றன - மண்ணில் வெட்டுண்டு உருள்கின்ற காரணத்தால்; மடிகின்றன பல ஆம் - இறந்து போனவை பல ஆகும்.

இரணம் பண்ணின் படர்தலை - பொன்னால் இயன்ற அலங்காரத்தை உடைய பரந்த மத்தகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the wind at the final end of an age that makes the sea, held within its bounds, spill over,
  2. the fierce hostile arrows rise beyond all counting;
  3. as they strike the broad heads decked with gold,
  4. many die; the rutting beasts, like clouds, roll upon the ground.

What the poem says

Ilakkuvaṉ's arrows come in numbers past counting, like the storm wind at the end of the world that drives the ocean over its shores. They strike the elephants on their broad foreheads, which are covered with golden ornaments, and the cloud-dark beasts roll dead on the ground in great numbers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uḷ niṉṟu alai kaṭal nīr uka iṟutik kaṭai uṟu kāl
eṇṇiṉtalai nimirkiṉṟaṉa ikal veṅ kaṇai, iraṇap
paṇṇiṉ paṭar talaiyil paṭa, maṭikiṉṟaṉa pala ām,
maṇṇiṉtalai uruḷkiṉṟaṉa maḻai ottaṉa matamā.