கம்பராமாயணம் 7914 · யுத்த 17.143
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பறை அற்றம் இல் விசை பெற்றன - பறவை (போல் பறத்தலை உடைய) குற்றம் இல்லாத வேகத்தை உடைய; பிழை அற்றன - குறி தவறுதல் இல்லாத; பிறை பற்றிய எனும் நெற்றிய பிறழ - பிறை வடிவுடைய நெற்றியை உடையனவாகிய இலக்குவனது அம்புகள் பாய்தலால்; அமரர்க்கு இறை - தேவர்கட்குத் தலைவன் ஆகிய இந்திரன்; அற்றைய முனிவில் படை எறிய - அப்போது தோன்றிய சினத்தால் வச்சிரப்படையை வீச; கிரி பரிய புடை எழு பொன் சிறை அற்றன என இற்றன - மலைகள் அறுந்து பட இரு பக்கங்களிலும் உள்ள அழகிய சிறகுகள் வீழ்ந்தன போல உயிரொழிந்து கிடந்தன.
பிழையற்றன - தவறுதல் இல்லாத. பிறை பற்றிய எனும் நெற்றிய - பிறைமுக அம்புகள் (அர்த்த சந்திர பாணங்கள்). பறை - பறத்தல், பறவை எனினும் ஆம். அற்றம் - சோர்வு, குற்றம் எனினுமாம். பரிய - அறுபட.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the unerring arrows with crescent heads, swift as a flight that never flags,
- darted among them, the rutting beasts, swollen with rage, fell
- like mountains whose golden wings, rising on either side, were cut
- when the king of the gods, in his anger of that day, hurled his weapon.
What the poem says
Ilakkuvaṉ shoots crescent-headed arrows, swift as birds and never missing their mark, and the elephants collapse.
The image recalls an old myth: mountains once had wings and flew about, until Intiraṉ, king of the gods, grew angry and sliced off their wings with his thunderbolt, so that they dropped to the earth. The great beasts fall like those wingless mountains.