கம்பராமாயணம் 7915 · யுத்த 17.144

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கதிர்ஒப்பன கணை பட்டுள - (யானைகள்) கதிரவனுக்கு ஒப்பான (வெம்மை மிக்க இலக்குவனது) அம்புகள் பட்டுள்ளன வாயும்; கதம் அற்றில - சினம் நீங்காதனவாயும்; கதழ்கார் அதிரத் தனி அதிர் கைக்கரி அளவற்றன உளவா - விரைவாகச் செல்லுகின்ற மேகத்தின் இடியொலி கூட அதிருமாறு ஒப்பற்றுப் பேரொலி செய்யும் கையை உடைய யானைகள் எண்ணிக்கையில் அடங்காதனவாயும் இருக்க; எதிர்பட்டு அனல் பொழிய - (இலக்குவன் அம்புகளுக்கு) நேரே எதிர்ப்பட்டு வெப்பம் வெளிப்பட; கிரி இடறி - (அதனால்) மலைகளில் தடுமாறி விழுந்து; திசை எழு கார் உதிரத்தொடும் ஒழுகி - திசைகளில் எழுகின்ற மிக்க குருதி (வெள்ளத்தில்) யில் இழுபட்டுப் போய், கடல் நடு உற்றவும் உளவால் - கடலின் நடுவில் சென்று சேருவனவும் (யானைகளும்) உள.

கதழ் - விரைவு. கார் உதிரம் - மேகம் போன்ற உதிரப் பெருக்கு எனலும் ஆம். ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There were countless elephants, struck by arrows like the sun, yet not losing their rage,
  2. trumpeting through their trunks with a matchless roar that made the swift clouds shudder;
  3. and there were some which, meeting them head on as they poured fire, stumbled over hills,
  4. were carried off on the dark flood of blood that rose in every direction, and reached the middle of the sea.

What the poem says

Even with the sun-bright arrows lodged in them, countless elephants keep their fury and trumpet so loudly that the thunderclouds seem to tremble. Others, struck full on by the fiery shafts, stagger, trip over the hills of the battlefield, and are washed away on the dark flood of blood until they reach the open sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1katir oppaṉa kaṇai paṭṭuḷa, katam aṟṟila, kataḻ kār
atirat taṉi atirkaik kari aḷavu aṟṟaṉa uḷavāl;
etirpaṭṭu aṉal poḻiya, kiri iṭaṟi, ticai eḻu kār
utirattoṭum oḻuki, kaṭal naṭu uṟṟavum uḷavāl.