கம்பராமாயணம் 7916 · யுத்த 17.145

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கண்ணின் தலை அயில் வெங்கணை பட - கண்ணினிடத்துக் கூர்மையான கொடிய அம்புகள் படுதலால்; காணா நின்றன - காண முடியாதபடி நின்றனவாகிய; இனமா - தொகுதியாகிய யானைகள்; எண்ணின் தலை நிமிர் வெங்கதம் முதிர்கின்றன - அளவிடற்கரியதாய் நிமிர்கின்ற கொடிய சினம் முதிரப் பெற்றனவாய்; மலை போல் மண்ணின் தலை நெரியும் படி திரிகின்றன - மலைகள் நடத்தல் போல் நிலத்தின் இடம் நெரியும்படி திரிவனவாய், உள் நின்று அலை நிருதர் கடல் உலறிட்டன உளவால் - (எதிரிகளை நோக்கிச் செல்லாது) உள்ளேயே சுற்றித் திரிந்து அரக்கர் படையாகிய கடலையே வற்றச் செய்து விட்டனவுமுள.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Struck in the eyes by sharp, cruel arrows, they stood unable to see;
  2. the herds of beasts, their fierce rage swelling beyond measure,
  3. roamed like mountains so that the face of the earth was crushed,
  4. and some of them dried up the sea of demons tossing within.

What the poem says

Some elephants are blinded by arrows in their eyes. Maddened beyond measure and unable to see the enemy, they wander about like moving mountains, crushing the ground, and trample their own side, draining away the sea of the demon army from within.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṇiṉtalai ayil veṅ kaṇai paṭa niṉṟaṉa, kāṇā,
eṇṇiṉtalai nimir veṅ katam mutirkiṉṟaṉa, iṉamā,
maṇṇiṉ talai neriyumpaṭi tirikiṉṟaṉa, malaipōl
uḷ niṉṟu alai nirutar kaṭal ulaṟiṭṭaṉa uḷavāl.