கம்பராமாயணம் 7917 · யுத்த 17.146
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒருகால் விடு தொடையின் - ஒரு தொடுப்பினில்; ஓர் ஆயிரம் அயில் வெங்கணை - ஓர் ஆயிரம் கூர்மையான கொடிய அம்புகள்; கார் ஆயிரம் விடு தாரையின் நிமிர்கின்றன - கரிய மேகங்கள் பொழியும் ஆயிரக்கணக்கான தாரைகள் போல் வெளிப்படுவனவாய் (உள்ளதால்); கதுவுற்று - அவ்வம்புகள் கவ்வுதலால் (பட்டுப் பிளத்தலால்); ஈராயிரம் மதமால் கரி விழுகின்றன - ஈராயிரம் மத மயக்கம் கொண்ட யானைகள் இறந்து விழுகின்றன; இனிமேல் ஆராய்வது என்? - (என்றால்) அவனது விற்றொழில் பற்றி இனிமேல் ஆராய்வதற்கு என்ன உள்ளது. அவன் வில் தொழில் அமரேசரும் அறியார் - அந்த இலக்குவனின் சித்திர வில் தொழிலைத் தேவர் தலைவர்களும் அறிய மாட்டார்கள்.
கதுவுற்று - கவ்வப்பட்டு, மால் - மயக்கம். அமரேசர் - தேவர் தலைவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A thousand sharp, cruel arrows in a single draw
- shoot forth like the streams a thousand clouds let fall; seized by them,
- two thousand maddened rutting elephants fall! What more
- is there to examine? Even the lords of the gods do not know his archery.
What the poem says
With one pull of the bow Ilakkuvaṉ releases a thousand arrows, streaming out like the downpour from a thousand rain clouds, and two thousand elephants drop dead. The poet gives up trying to describe his skill: not even the rulers of the gods could fathom such archery.