கம்பராமாயணம் 7918 · யுத்த 17.147
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பணையின் மதபிணை வெங் காரின் தரு குருதிப் பொரு கடல் நின்றன கடவா - தந்தங்களோடு மதம் பொருந்திய கொடிய கரு மேகம் போன்ற யானைகளின் உடம்பில் இருந்து பெருகி வருகிற குருதியால் ஆகிய கடலில் நின்று அதைக் கடந்து செல்ல முடியாதனவாம்; தேரும் - அழிந்த தேரும்; தெறு கரியும் - அழிக்கும் தன்மை கொண்ட யானைகளும்; பொரு சின மள்ளரும் - போர் செய்யும் சினம் மிகுந்த அரக்கவீரரும்; புரவிக் குலம் எவையும் - குதிரைக் கூட்டங்கள் முதலிய எல்லாமும்; வயவெம் போரின் தலை உகள்கின்றன - வெற்றியுள்ள கொடிய போர்க் களத்திலேயே புரள்கின்றனவாகிப்; பேரும் திசை பெறுகின்றில - இடம் பெயர்ந்து செல்லும் திசையைப் பெறாதவையாயின.
அதிகாயனுடைய நால்வகைப் படையும், அவனது யானைப் படை சிந்திய குருதிக் கடலைக் கடக்க முடியாது போர்க்களத்திலேயே உழன்றன. பணை - தந்தம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The chariots, the destroying elephants, the fierce fighting warriors,
- and all the troops of horses tossing on the field of cruel, victorious war
- found no direction in which to move; they stood in the battling sea of blood
- poured out by the dark, fierce, tusked and rutting cloud-like elephants, unable to cross it.
What the poem says
The rest of Atikāyaṉ's fourfold army, chariots, elephants, foot soldiers and horses, is now trapped. The blood shed by the slaughtered elephants has formed a sea they cannot cross, and they flounder on the battlefield with nowhere to go.