கம்பராமாயணம் 792 · பால 12.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பெய் கடல் பிறந்து - பல வளங்களும் நிறைந்த பாற்கடலிலே தோன்றி; அயல் பெறற்கு ஒணா - வேறிடத்தில் பெற முடியாத; மருந்து பெற்று - அமுதத்தைத் தம் நல்வினைப் பயனால் அடைந்தும்; ஐய பொன் கலத்தொடு - (அதனை உடனே பருகாமல்) அழகிய பொன்கலசத்தோடு; அம்கை விட்டிருந்து - தம் கையிலிருந்து அதனை நழுவவிட்ட; ஆதர்போல் - அறிவற்ற மூடர்களைப் போல; மொய் கிடக்கும் - வலிமை மிக்க; அண்ணல்தோள் - அப் பெருமானின் தோள்கள் (காணப் பெற்றும்); முன்னமே முயங்கிடாது - (கண்ட) அப்போதே தழுவிக் கொள்ளாமல்; கைக் கடக்க - கைநழுவிப் போகும்படி; விட்டிருந்து - விட்டொழித்துப் பின்; கட்டுரைப்பது - தனியிருந்து பலவாறாகக் கூறிப் புலம்புவது; என்கொல் - எதற்காக?
அமுதம் கண்ணிற்பட்டால் உடனே அது நிறைந்துள்ள பொற்கலத்தைக் கைப்பற்றி உண்பது முறை. ஆனால், அப்படிச் செய்யாது கைநழுவவிட்ட மூடர்போல இராமனைக் கண்ணால் கண்டபோது நான் அவனைத் தழுவிக் கொள்ளாமல் விட்டுவிட்டு இப்போது பலவாறு பேசி என்ன பயன்' என்கிறாள் சீதை. ஆதர் - அறிவில்லாதவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Like fools who obtained the nectar born of the bountiful sea, not to be had anywhere else,
- and then let it slip from their palms along with its lovely golden vessel,
- I did not clasp the mighty shoulders of that noble one when I first could;
- having let him slip out of my hands, why sit here and lament?'
What the poem says
Cītai blames herself. When she saw Irāmaṉ she should have embraced him at once; instead she let him pass. She is like a fool who, by rare good fortune, is handed the nectar of immortality from the ocean of milk in a golden pot and lets pot and nectar slip through his fingers.
Having thrown away such a chance, she asks, what good is all her lamenting now?