கம்பராமாயணம் 7922 · யுத்த 17.151

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நாலாயின நவ யோசனை நனிவன் திசை எவையும்
மால் ஆயின மத வெங் கரி திரிகின்றன வரலும்,
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சின; துகளே
போல் ஆயின வய வானமும் அளறு ஆனது புவியே.

பொருள் · Meaning in Tamil

நாலாயின நவயோசனை நனிவன் திசை எவையும் - முப்பத்தாறு யோசனை தூரம் உள்ள மிக வலிய திசைகளில் எல்லாம்; மால் ஆயின மத வெங்கரி திரிகின்றன வரலும் - மயக்கம் கொண்ட மதத்தினை உடைய கொடிய யானைகள் திரிகின்றனவாகி மிகுதியாக வருதலும்; உலகு எங்கணும் தோல் ஆயின என அஞ்சினர் - உலகம் முழுவதும் யானைகளே ஆய்விட்டன என்று (அனைவரும்) அஞ்சினர்; வய வானமும் துகளே போல் ஆயின - வலிய வானம் எல்லாம் (மண்ணின்) துகள் போல் ஆயின; புவியே ஆறானது - நிலவுலகம் (அவ்வியானைகளின் மதநீர்ப் பெருக்கால்) ஆறாக மாறிவிட்டது.

நாலாயின நவயோசனை - 4 × 9 = 36 யோசனை. நவம் - ஒன்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Over four times nine yojanas, in every direction,
  2. the fierce, maddened rutting elephants came roaming,
  3. and all feared that the whole world had become elephants; the mighty sky
  4. became like dust, and the earth became a river.

What the poem says

Elephants fill the land for thirty-six yojanas ("four nines") in every direction, so that everyone fears the whole world has turned into elephants. The dust they raise makes the sky itself look like a cloud of earth, while the ichor pouring from them turns the ground into a river.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nālāyiṉa nava yōcaṉai naṉi vaṉ ticai evaiyum
māl āyiṉa mata veṅ kari tirikiṉṟaṉa varalum,
tōl āyiṉa ulaku eṅkaṇum eṉa añciṉar; tukaḷē
pōl āyiṉa vaya vāṉamum āṟāṉatu puviyē.