கம்பராமாயணம் 7923 · யுத்த 17.152
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கழுதின் திரள் பிணமா தலை கண்டில கடைகண்டில - பேய்களின் கூட்டம் பிணமாகி விட்ட யானைகளின் தலைப் பக்கத்தையும் வால் பக்கத்தையும் காணாதனவாம்; இடை கண்டென மலை கொண்டென எழுகின்றன - (அவற்றை) இடையில் கண்டு மலைகளைத் தூக்கிச் செல்வன போல் (அந்த யானைகளின் பிணங்களைத்) தூக்கிக் கொண்டு செல்வனவாயின; திரையால் புடை கொண்டு எறி குருதிக் கடல் - அலைகளால் பக்கங்களில் எறியப்படுகின்ற குருதியாகிய கடல்; பொறி வெம் படை கொண்டு இடை படர்கின்றன - தீப்பொறி வெளிப்படும் கொடிய படைக் கலங்களை இடையில் அடித்துக் கொண்டு பரவிச் செல்லுகிற; மத யாறுகள் பல புணர்கின்றன - மதநீர் ஆறுகள் பல (சென்று) சேர்வனவாயின.
கடை - இறுதி. தலை - தொடக்கம் எனினும் ஆம். ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The hordes of ghouls could see neither the end nor the head of the dead beasts;
- seeing only their middles, they rose up as if lifting mountains;
- and many rivers of rut, carrying spark-flashing fierce weapons in their midst,
- flowed on and joined the sea of blood that flung its waves on every side.
What the poem says
The elephant carcasses are so vast that the ghouls feeding on the battlefield cannot see either end of them; grabbing them by the middle, they heave them up as if carrying mountains.
Meanwhile rivers of ichor, sweeping along gleaming weapons, flow into the sea of blood whose waves crash in all directions.