கம்பராமாயணம் 7924 · யுத்த 17.153

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒற்றைச் சரம் அதனோடு ஒரு கரி பட்டு உக, ஒளி வாய்
வெற்றிக் கணை, உரும் ஒப்பன, வெயில் ஒப்பன, அயில் போல்
வற்றக் கடல் சுடுகிற்பன, மழை ஒப்பன பொழியும்
கொற்றக் கரி பதின் ஆயிரம் ஒரு பத்தியில் கொல்வான்.

பொருள் · Meaning in Tamil

ஒற்றைச் சரம் அதனோடு ஒருகரி பட்டு உக - ஓர் அம்புக்கு ஒரு யானை இறந்து விழுமாறு; உரும் ஒப்பன, வெயில் ஒப்பன, அயில் போல் வற்றச் சுடுகிற்பன - இடியைப் போன்றவையும், வெய்யிலை ஒத்துத் தகிப்பனவும், உக்கிர குமார பாண்டியன் உடைய வேற்படை போல் கடலை வற்றச் செய்வனவுமாகிய; ஒளிர் வாய் வெற்றிக் கணை - ஒளி விடுகிற வாயை உடைய வெற்றி பொருந்திய அம்புகளால்; மழையொப்பன பொழியும் கொற்றக் கரி - மழையை ஒத்து (மதநீரைப்) பொழியும் வெற்றி பொருந்திய யானைகள்; பதினாயிரம் ஒரு பத்தியில் கொல்வான் - பதினாயிரத்தை ஒரு வரிசையில் கொன்றான் (இலக்குவன்).

அயில் - வேல், ஈண்டு உக்கிர குமார பாண்டியன் கடல் வற்ற விட்ட வேற்படை. உக்கிர குமார பாண்டியனுடைய பகை கொண்ட இந்திரன் வருணன் மூலம் அவன் வாழும் இடமான கடல் நீரைப் பொங்கச் செய்து மதுரை நகரை அழிக்கத் தொடங்கும் போது சிவ பெருமான் அப் பாண்டியன் கனவில் தோன்றிக் கட்டளை இட்டபடி வேல் படையை ஏவிக் கடலை வற்றுமாறு செய்து வருணனை அடக்கினான் என்பது புராணச் செய்தி. திருவிளையாடற் புராணம் கடல் சுவற வேல்விட்ட படலத்தில் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that one elephant fell dead with each single shaft, with victorious arrows
  2. of gleaming mouths, like thunder, like the burning sun, able,
  3. like the lance, to scorch the sea dry,
  4. he slays ten thousand conquering elephants that pour rut like rain, in a single row.

What the poem says

One arrow, one elephant: Ilakkuvaṉ's shining arrows, strong as thunder and hot as the sun, kill ten thousand rain-dark war elephants in a single line.

The arrows are likened to the lance of Ukkira Kumāra Pāṇṭiyaṉ. In the Tiruviḷaiyāṭaṟ Purāṇam, when Intiraṉ had the sea god flood Maturai, Civaṉ appeared to this Pāṇṭiya king in a dream, and the king hurled a lance that dried up the ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṟṟaic caram ataṉōṭu oru kari paṭṭu uka, oḷir vāy
veṟṟik kaṇai, urum oppaṉa, veyil oppaṉa, ayilpōl
vaṟṟak kaṭal cuṭukiṟpaṉa, maḻai oppaṉa poḻiyum
koṟṟak kari patiṉāyiram oru pattiyil kolvāṉ.