கம்பராமாயணம் 7925 · யுத்த 17.154

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கரியின் படி கொளலால் - (இலக்குவன்) யானைப் படையைத் தேடிக் கொல்லும் தன்மை கண்டு; மலை அஞ்சின - (யானைகள் போல் வடிவும் நிறமும் உடைய) மலைகள் அஞ்சின; மழை அஞ்சின - (கரு நிழல் படிந்துள்ள) காடுகளும் அஞ்சின; பிறவும் திசை வெங்கரி நிலை அஞ்சின - இவைகளின் வேறான திசை யானைகளும் தங்கள் நிலையில் நிற்க அஞ்சின; கடலின் நிமிர்கின்ற அலை அஞ்சின - கடலில் உயர்ந்து வருவனவாகிய (கருநிறம் உள்ள) அலைகள் அஞ்சின; சில பிறிது என் - வேறு சிலவற்றைப் பற்றித் தனியாகக் கூற என்ன உள்ளது? தனி ஐங்கர கரியும் கொலை அஞ்சுதல் புரிகின்றது - ஒப்பற்ற ஐந்து கைகளை உடைய கணபதி ஆகிய யானையும் (யானை வடிவில் இருத்தலால்) இலக்குவன் கொல்வானோ என்று அச்சத்தைக் கொண்டுள்ளது.

ஐங்கர கரி - ஐந்து கரங்களை உடைய கணபதி ஆகிய யானை. தொடர்பு உயர்வு நவிற்சி அணி. “கரியின்படி கொளலால்” என்பதற்கு யானையின் வடிவத் தன்னை கொண்டிருத்தலால் எனப் பொருள் கோடல் சிறப்பு என்பது மகாவித்துவான். மயிலம். வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mountains were afraid; the clouds were afraid; the forests were afraid; and others too,
  2. the fierce elephants of the quarters, feared to keep their posts; the rising
  3. waves of the sea were afraid; why speak of more? Even the peerless five-handed Elephant
  4. is filled with fear of being killed, since he has taken an elephant's form.

What the poem says

Ilakkuvaṉ is killing anything that looks like an elephant, so everything big and dark trembles: mountains, rain clouds, forests, the waves of the sea, and even the great elephants that guard the eight directions of the world.

The verse ends in a playful hyperbole: even Gaṇapati, the elephant-headed god with five hands, is afraid he too might be shot, because he has an elephant's shape.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malai añciṉa; maḻai añciṉa; vaṉam añciṉa; piṟavum
nilai añciṉa; ticai veṅ kari; nimirkiṉṟaṉa kaṭaliṉ
alai añciṉa; piṟitu eṉ cila? taṉi aiṅ kara kariyum,
kolai añcutal purikiṉṟatu kariyiṉ paṭi koḷalāl.