கம்பராமாயணம் 7926 · யுத்த 17.155

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கால் ஏறின சிலை நாண் ஒலி, கடல் ஏறுகள் பட வான்
மேல் ஏறினர் மிசையாளர்கள்; தலை மெய் தொறும் உருவ,
கோல் ஏறின உரும் ஏறுகள் குடியேறின எனலாய்
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய.

பொருள் · Meaning in Tamil

கால் ஏறின சிலை நாண் ஒலி - (இலக்குவனுடைய) இரு முனைகளும் பொருந்துமாறு வளைத்த வில் நாணின் ஒலி; கடல் ஏறுகள் படவான் மேல் ஏறின - கடலில் உள்ள சுறா மகரம் முதலிய பெரு மீன்களை அழியச் செய்து வானத்திலும் தோன்றின; உரும் ஏறுகள் குடியேறின எனலாம் - (அதற்குப்பின்பு) பேரிடிகள் ஓரிடத்தில் குடியேறின என்னும் படி; மால் ஏறின களியானைகள் மழை ஏறு என மறிய - மயக்கம் மிக்க மதக்களி கொண்ட யானைகள் மழைக்கால இடியேறு என்னுமாறு மடங்கி விழவும்; மிசையாளர்கள் தலை மெய் தொறும் உருவ கோல் ஏறின - (பின்) யானை மேலுள்ள வீரர்களின் தலைகள் மற்றும் உடம்புகளிலும் ஊடுருவி (அவ்) அம்புகள் பாய்ந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sound of the bowstring, drawn till both tips met, killed the great beasts of the sea
  2. and rose up to the sky; through the heads and bodies
  3. of the riders the arrows went in and passed through, as if thunderbolts had come to dwell in them,
  4. and the maddened, rutting elephants toppled like peals of thunder in the rains.

What the poem says

The twang of Ilakkuvaṉ's fully drawn bow is so loud that it kills the sharks and sea monsters in the ocean and echoes up to the heavens. His arrows pierce the heads and bodies of the elephant riders as if thunderbolts had made their home in them, and the frenzied elephants crash down with a sound like the thunder of the monsoon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāl ēṟiṉa cilai nāṇ oli, kaṭal ēṟukaḷ paṭa vāṉ
mēl ēṟiṉa micaiyāḷarkaḷ; talai meytoṟum uruva,
kōl ēṟiṉa urum ēṟukaḷ kuṭiyēṟiṉa eṉalāy
māl ēṟiṉa kaḷi yāṉaikaḷ maḻai ēṟu eṉa maṟiya.