கம்பராமாயணம் 7927 · யுத்த 17.156

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இவ்வேலையின் - இந்த நேரத்தில்; முதல் எழு வேலையும் அனையார் வெவ்வேலவர் - சிறப்புடைய ஏழு கடல்களை ஒத்துள்ளவரான கொடிய வேலை ஏந்திய அரக்கர்; செல ஏவிய கொலை யானையின் மிகையைச் - செல்லுமாறு ஏவி அனுப்பிய கொலைத் தன்மை கொண்ட யானைகளின் மிகுதியை; அனுமான் செவ்வே உறநினையா - அனுமன் செம்மையாகப் பொருந்த நினைத்துப் பார்த்து; ஒரு செயல் செய்குவென் என்பான் - ஒரு (வீரச்) செயலைச் செய்வேன் என்று (மனத்துள் நினைத்து); அவன் தனிவேல் எனத் தகையான் தவ்வேலென வந்தான் - அந்த இலக்குவன் உடைய ஒப்பற்ற வேலின் தன்மையை உடையவனாய் திடீரென்று (அங்கு) வந்தான்.

நினையா - செய்யா என்னும் வாய்பாட்டு வினை எச்சம். தவ்வேல் என - தாவுகின்ற வேல்போல் எனினும் அமையும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At this moment Aṉumāṉ, considering well the mass
  2. of killer elephants sent in by the cruel spearmen, who were like
  3. all the seven seas, said, 'I will do a deed of my own,'
  4. and came in a flash, he who was worthy to be called that hero's peerless spear.

What the poem says

Aṉumāṉ now enters the fight. Seeing the vast numbers of elephants that the demons, as boundless as the seven seas, have sent forward, he resolves to perform a feat of his own and suddenly arrives on the scene. He is called Ilakkuvaṉ's own peerless spear, his most effective weapon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iv vēlaiyiṉ, aṉumāṉ, mutal eḻu vēlaiyum aṉaiyār
vev vēlavar, cela ēviya kolai yāṉaiyiṉ mikaiyaic
cevvē uṟa niṉaiyā, ‘oru ceyal ceykuveṉ ‘eṉpāṉ,
tavvēleṉa vantāṉ, avaṉ taṉi vēl eṉat takaiyāṉ.