கம்பராமாயணம் 7928 · யுத்த 17.157
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முதிர் மத யானையை அனையான் - முதிர்ந்த மதங் கொண்ட யானையைப் போன்றவனும்; முதல் அரி போல் வரு திறலான் - முழு முதற் பொருளாகிய நரசிங்க மூர்த்தியை ஒத்த வலிமை கொண்டவனும்; வார்த் தங்கிய கழலான் - வாரால் பிணைத்துக் கட்டப்பட்ட வீரக்கழலை அணிந்தவனும்; புகழ் கொண்டான் - (பெரும்) புகழ் கொண்டவனும் ஆகிய (அனுமன்); தீர்த்தன் கழல் பரவா - தூயவன் ஆகிய இராமபிரானது திருவடிகளைத் துதித்து; அங்கு ஆர்த்து அனல் விழியா - அப்போது பேரொலி செய்து, நெருப்பு வெளிப்பட விழித்து; நமனார் போர்த்தண்டினும் வலிது ஆயது - யமனுடைய போரிடும் தண்டினும் வலிமை உடையதாக; ஒரு மரன் நின்றது கொண்டான் - (அருகில் இருந்து) ஒப்பற்ற மரத்தைக் (போர் செய்யக்) கைக் கொண்டான்.
முதல் அரி - முழுமுதற் பொருளாகிய நரசிங்க மூர்த்தி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Roaring there, his eyes flashing fire, he who was like a rutting elephant in its prime,
- praising the feet of the Pure One, he whose might was like the primal Lion,
- he with the strap-bound hero's anklet, took up a tree that stood there,
- stronger than the battle-club of Death, he who had won such fame.
What the poem says
Aṉumāṉ, as powerful as a mature bull elephant in rut and as mighty as the Man-Lion form of Tirumāl, first salutes in his mind the feet of the pure Irāmaṉ. Then, roaring and with blazing eyes, he uproots a nearby tree that is more terrible than the club carried by Yama, god of death, and makes it his weapon.