கம்பராமாயணம் 7932 · யுத்த 17.161

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாரிக் குரை கடலில் புக விலகும் - (அனுமன் யானைகளை) எடுத்து ஒலிக்கிற கடலில் புகும்படி எறிவான்; நெடு மரத்தால் சாரித்து அலைத்து உருட்டும் - நீண்ட மரத்தைக் கொண்டு சாரி திரிந்து அலைத்து உருட்டுவான்; நெடுந் தலத்தில் படுத்து அரைக்கும் - பெரிய நிலத்தில் தள்ளி அரைப்பான்; பாரில் பிடித்து அடிக்கும் - நிலத்தில் பிடித்து அடிப்பான்; குடர் பறிக்கும் - குடலைப் பறிப்பான்; படர் விசும்பின் ஊரில் செல எறியும் - படர்ந்த வானுலகத்து ஊரில் செல்லுமாறு எறியும்; மிதித்துக் கலக்கும் - மிதித்துக் கலக்கும்; முகத்து உதைக்கும் - (அவ்வியானைகளின்) முகத்தில் உதைப்பான்.

அனுமன் யானைகளைப் பலபடி அழித்தமை கூறினார். விலகும் - எறியும். சாரித்து - சாரி இரிந்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He scoops them up and flings them into the roaring sea; with his long tree
  2. he circles round and grinds and rolls them; he throws them on the wide ground and crushes them;
  3. he seizes them and dashes them on the earth; he tears out their guts; he hurls them
  4. to go to the cities of the wide heavens; he tramples and churns them; he kicks them in the face.

What the poem says

The catalogue continues. Aṉumāṉ hurls some elephants into the sea, wheels about and pounds others with his tree, grinds them into the ground, beats them on the earth, rips out their entrails, flings them so high that they seem bound for the cities of the gods, tramples them and kicks them in the face.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vārik kurai kaṭalil puka vilakum; neṭu marattāl
cārittu araittu uruṭṭum; neṭun talattil paṭuttu araikkum;
pāril piṭittu aṭikkum; kuṭar paṟikkum; paṭar vicumpiṉ
ūril cela, eṟiyum; mitittu uḻakkum; mukattu utaikkum.