கம்பராமாயணம் 7934 · யுத்த 17.163
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சய்யத்தினும் உயர்வுற்றன - (மேலும் அனுமன்) மலைகளைக் காட்டிலும் உயர்ந்தனவும்; தறுகண் களி மதமா - அஞ்சாமையும் மயக்கமும் உடைய மதங் கொண்டவையும்; மாறா மய்யல் கரி - மயக்கம் நீங்காதனவுமாகிய யானைகள்; நூறாயிரம் நொய்தின் கடிது எதிர் உற்றன - நூறாயிரம் அளவுள்ள எளிமையாயும் விரைவாயும் (தன்) எதிர் வந்தவைகளை; உகிரின் சில குழைபுக்கு உரு மறைய - தன் நகத்தால் சில தழைகளைப் போன்று உள்ளே அழுந்தி உருவம் மறைய; தொய்யல் படர் அழுவக் கொழுஞ் சேறாய் உகத்துவைப்பான் - குழம்பாய்ப் படர்ந்து நீர் நிலத்தில் கொழுவிய சேறாகுமாறு துவைத்தான்.
நொய்தின் - எளிமையாக, உகிர் - நகம், குழை புக்கு உரு மறைய - தழைகளைப் போன்று உள்ளே அழுந்தி உருவம் மறைய; குழைந்து புகுந்து உருவம் மறைய எனலும் ஆம். தொய்யல் - குழம்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Rutting beasts, fearless and frenzied, taller than the Sahya hills,
- a hundred thousand of them, came at him lightly and swiftly, elephants whose madness
- never cleared; some, pressed in by his claws like leaves until their shape was lost,
- he pounded until they spilled as thick mud spread over a marsh.
What the poem says
A hundred thousand more elephants, taller than the Sahya mountains of the western coast and permanently maddened, charge at Aṉumāṉ. He presses some into the ground with his claws until they lose all shape, like crushed leaves, and stamps on them until they become a thick sludge spread over the earth.