கம்பராமாயணம் 7935 · யுத்த 17.164

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விறலோன் - வலிமை உடையவன் ஆன அனுமன்; வேறாயின மதவெங்கரி ஒரு கோடியின் நூறாயிரம் படுத்தான் - வேறாக வந்த மதத்தை உடைய கொடிய யானைகள் ஒரு கோடியில் (மேல் கூறியவாறு போரிட்டு) நூறாயிரத்தைக் கொன்றான்; இது நுவல்காலையின் - இதனை (அவ்வனுமன்) விரும்பிச் செய்வதைக் கூறும் அளவில்; இளையோன் கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான் - இளையவனாகிய இலக்குவன் (தன்) பாகமாக நின்றவை என்று (கருதி அனுமன் கொல்லாமல் விட்ட) அந்த (மீதி) யானைகளைத் தன் கொல்லும் தன்மை உள்ள அம்புகளால் கொன்றான். நெடுந்திசை காவலர் தேறாதது ஓர் பயத்தால் இரிந்தார் - (அச்செயல் கண்ட) எண்திசைக் காவலர்கள் தெளிய முடியாத பேரச்சத்தால் நிலை குலைந்து ஓடினார்கள்.

தேறாதது ஓர் பயம் - தேறுதல் கூறித் தெளிவிக்க ஒண்ணாத ஒப்பற்ற பயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of the crore of fierce rutting elephants that came besides, the mighty one
  2. laid low a hundred thousand; in the time it takes to tell it, the younger one,
  3. taking the rest as his share, killed them with his deadly arrows;
  4. and the guardians of the far quarters fled in a fear that nothing could calm.

What the poem says

Of the crore of elephants in this last wave, Aṉumāṉ kills a hundred thousand. In the time it takes to tell of it, Ilakkuvaṉ shoots down all the rest, treating them as his share of the work. Watching this, even the gods who guard the eight directions of the world run away in uncontrollable terror.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēṟāyiṉa mata veṅ kari oru kōṭiyiṉ, viṟalōṉ,
nūṟāyiram paṭuttāṉ; itu nuvalkālaiyiṉ, iḷaiyōṉ,
kūṟāyiṉa eṉa aṉṉavai kolai vāḷiyiṉ koṉṟāṉ;
tēṟātatu ōr payattāl neṭun ticai kāvalar irintār.