கம்பராமாயணம் 7937 · யுத்த 17.166

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உதிரக் கடல், பிண மால் வரை, ஒன்று அல்லன பலவா
எதிர, கடு நெடும் போர்க்களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான்
கதிர் ஒப்பன சில வெங்கணை அனுமான் உடல் கரந்தான்,
அதிரக் கடல் நெடுந் தேரினன் மழை ஏறு என ஆர்த்தான்.

பொருள் · Meaning in Tamil

உதிரக்கடல் - குருதிக்கடலும்; பிணமால் வரை - பிணக் குவியல்களாகிய (யானை உடல்களின்) பெரிய மலையும்; ஒன்று அல்லன பலவாய் எதிர - ஒன்றல்லாமல் பலவாய் எதிர்ப்பட; நெடுந்தேரினன் - பெரிய தேரை உடைய தேவாந்தகன்; கடு நெடும் போர்க்களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான் - கடுமையான பெரிய போர்க்களத்தில் தான் ஒருவனாய்ப் புகுந்து எதிர்த்தவனாய்; கதிர் ஒப்பன சில வெங்கணை அனுமான் உடல் கரந்தான் - கதிரவனின் ஒளிக் கதிர்களை ஒத்த (சுடுகணைகளாகிய) சில கொடிய அம்புகளை அனுமன் உடலில் மறைந்து புதையுமாறு செலுத்தி; கடல் அதிர மழை ஏறு என ஆர்த்தான் - கடல் அதிரும்படி மழைக்கால இடி போல பேரொலி செய்தான்.

உதிரக்கடல் - உருவகம். மால் வரை - பண்புத்தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With seas of blood and huge mountains of corpses, not one but many,
  2. confronting him, alone he entered the fierce, wide battlefield and took up the fight;
  3. he buried in Aṉumāṉ's body some cruel arrows bright as sunbeams,
  4. and he of the tall chariot roared like monsoon thunder so that the sea shook.

What the poem says

Tēvāntakaṉ, alone in his tall chariot, makes his way through seas of blood and mountains of carcasses and takes on the fight single-handed. He drives sun-bright arrows deep into Aṉumāṉ's body and gives a roar like monsoon thunder that makes the ocean tremble.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1utirak kaṭal, piṇa māl varai, oṉṟu allaṉa palavāy
etira, kaṭu neṭum pōrk kaḷattu oru tāṉ pukuntu ēṟṟāṉ
katir oppaṉa cila veṅ kaṇai aṉumāṉ uṭal karantāṉ,
atirak kaṭal neṭun tēriṉaṉ maḻai ēṟu eṉa ārttāṉ.