கம்பராமாயணம் 7938 · யுத்த 17.167

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அப்போதினின் அனுமானும் - அப்போது அனுமானும்; ஓர் மரம் ஓச்சி நின்று ஆர்த்தான் - ஒரு மரத்தை உயரத் தூக்கிச் சுழற்றிப் பேரொலி செய்தவனாய்; இப்போது இவன் உயிர் போம் என - இப்போது இவனுயிர் (தேவாந்தகன்) போய் விடும் என்று சொல்லி; உரும் ஏறு என எறிந்தான் - பேரிடி போன்ற ஒலியோடு எறிந்தான்; வெப்போ என வெயில் கால்வன அயில் வெங்கணை - கொடிய நெருப்போ என எண்ணும்படி வெப்பத்தை வெளியிடும் கூர்மையான கொடிய அம்புகளை; விசையால் - மிக வேகமாக; துப்போ என - (அந்த மரம் ஒரு) வலிமை உடைய பொருளோ என எண்ணுமாறு; துணியாம் வகை - (அது) துண்டுபட்டுச் சிதறுமாறு; தேவாந்தகன் துரந்தான் - தேவாந்தகன் செலுத்தினான்.

ஓச்சுதல் - செலுத்துதலுமாம். வெப்போ - கொடிய நெருப்போ, துணியாம் வகை - துண்டு பட்டுச் சிதறுமாறு, துப்பு - வலிமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment Aṉumāṉ too brandished a tree and stood and roared;
  2. saying, 'Now this one's life will go,' he hurled it like a thunderbolt;
  3. but with sharp, cruel arrows giving off heat as if they were fire itself,
  4. Tēvāntakaṉ shot so swiftly that it was cut to pieces: 'Was that a mighty thing?'

What the poem says

Aṉumāṉ answers by whirling a tree over his head, roaring that Tēvāntakaṉ's life is about to end, and throwing it like a thunderbolt. Tēvāntakaṉ meets it with a burst of red-hot arrows that slice it to pieces so easily that it seems as if it had never been a solid thing at all.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1appōtiṉiṉ, aṉumāṉum, ōr maram ōcci niṉṟu ārttāṉ,
‘ippōtu ivaṉ uyir pōm ‘eṉa, urum ēṟu eṉa eṟintāṉ;
veppō eṉa veyil kālvaṉa ayil veṅ kaṇai vicaiyāl,
‘tuppō ‘eṉa tuṇiyām vakai, tēvāntakaṉ turantāṉ.