கம்பராமாயணம் 7939 · யுத்த 17.168

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வயவானரக் குலத்தோர்க்கு ஏறு - வலிமை மிக்க வானரக் குலத்தவர்க்கு தலைவன் ஆகிய அனுமன்; மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் - வேறாகப் பிறிது ஒரு மலையைக் (கையில்) எடுத்தான்; ஆங்கு அது எறியாத முன் - அப்போது அந்த மலையை எறிவதற்கு முன்னமேயே; முறியாய் உக எய்தான் - அம்மலை துண்டுபட்டுச் சிதறும்படி (தேவாந்தகன்) அம்பினை எய்தான்; கோல் தாங்கிய சிலையானுடன் நெடு மாருதி கொதித்தான் - அம்பு பொருந்திய வில்லினை உடைய தேவாந்தகனுடன் சிறப்புப் பொருந்திய அனுமன் மிகச் சினந்து; ஆங்கு பாறு எனப் புகப்பாய்ந்து - அங்குப் பருந்து போலப் பாய்ந்து; அவன் நெடு வில்லினைப் பறித்தான் - அந்தத் தேவாந்தகனுடைய நெடிய வில்லைப் பறித்தான்.

மாறு - வேறாக, வயம் - வலிமை, ஏறு - தலைவன், சிங்க மெனினுமாம். கோல் - அம்பு, பாறு - பருந்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In its place he seized a mountain, he the bull among the mighty monkey clan;
  2. before he could hurl it, the other shot so that it fell in fragments;
  3. then great Māruti, seething against the bowman holding his arrows,
  4. swooped in like a kite and snatched away his long bow.

What the poem says

Aṉumāṉ, leader of the strong monkey race, picks up a mountain in place of the shattered tree, but Tēvāntakaṉ shoots it to pieces before it can even be thrown. Enraged, Māruti (Aṉumāṉ, son of the wind god) dives at him like a kite and tears the bow out of his hands.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṟu āṅku oru malai vāṅkiṉaṉ, vaya vāṉarak kulattōrkku
ēṟu; āṅku atu eṟiyāta muṉ, muṟiyāy uka eytāṉ;
kōl tāṅkiya cilaiyāṉuṭaṉ neṭu māruti kotittāṉ,
pāṟu āṅku eṉap pukap pāyntu avaṉ neṭu villiṉaip paṟittāṉ.