கம்பராமாயணம் 7940 · யுத்த 17.169

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பறித்தான் நெடும் படை, வானவர் பலர் ஆர்த்திட, பலவா
முறித்தான்; அவன் வலி கண்டு உயர் தேவாந்தகன் முனிந்தான்,
மறித்து ஆங்கு ஒரு சுடர்த் தோமரம் வாங்கா, மிசை ஓங்கா,
செறித்தான், அவன் இடத் தோள்மிசை; இமையோர்களும் திகைத்தார்.

பொருள் · Meaning in Tamil

நெடும் படை பறித்தான் - (தேவாந்தகன் உடைய) நீண்ட வில்லைப் பிடுங்கியவனாகிய (அனுமன்); பலர் வானவர் ஆர்த்திட - பல தேவர்கள் (மகிழ்ச்சியால்) பேரொலி செய்ய; பலவா முறித்தான் - (அந்த வில்லைப்) பல துண்டுகள் ஆகும்படி முறித்தான்; உயர் தேவாந்தகன் - (வீரத்தில்) சிறந்த தேவாந்தகன்; அவன் வலி கண்டு முனிந்தான் - அந்த அனுமனுடைய வலிமையைக் கண்டு சினந்தவனாய்; ஆங்கு மறித்து ஒரு சுடர்த் தோமரம் வாங்கா மிசை ஓங்கா - அப்போது மீண்டும் ஒரு ஒளி பொருந்திய தோமரம் என்னும் படையை எடுத்து மேல் ஓங்கி; அவன் இடத்தோள் மிசை செறித்தான் - அந்த அனுமனுடைய இடது தோளின் மீது நெருங்க அடித்தான்; இமையோர்களும் திகைத்தார் - (அச்செயல் கண்ட) தேவர்களும் திகைத்தார்கள்.

மறித்து - மீண்டும், தோமரம் - பகைவர் மீது எறியும் நீண்ட உலக்கை போன்ற போர்க் கருவி போலும். 167, 168 ஆகிய இரு பாடல்களும் அந்தாதி அமைப்பைப் பெற்றுள்ளமை காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who snatched the long weapon broke it into many pieces
  2. while many gods cheered; seeing his strength, lofty Tēvāntakaṉ grew angry;
  3. in turn he took up a blazing tōmaram, raised it high,
  4. and drove it into his left shoulder; even the gods were stunned.

What the poem says

Aṉumāṉ snaps the bow into many pieces as the watching gods shout for joy. Furious at this display of strength, Tēvāntakaṉ seizes a gleaming tōmaram, a heavy club-like missile, swings it overhead and smashes it into Aṉumāṉ's left shoulder, leaving even the gods aghast.

This verse begins with the word that ended the last one ("snatched"), a linking device called antāti.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṟittāṉ neṭum paṭai, vāṉavar palar ārttiṭa, palavā
muṟittāṉ; avaṉ vali kaṇṭu uyar tēvāntakaṉ muṉintāṉ,
maṟittu āṅku ōr cuṭart tōmaram vāṅkā, micai ōṅkā,
ceṟittāṉ, avaṉ iṭat tōḷmicai; imaiyōrkaḷum tikaittār.