கம்பராமாயணம் 7941 · யுத்த 17.170
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மடல் தோகையர் வலி வென்றவன் - மடப்பம் பொருந்திய மகளிர் ஏதுவாக உண்டாகும் காமம் ஆகிய (அகப் பகையை) வென்றவன் ஆகிய அனுமன்; சுடர்த் தோமரம் எறிந்து ஆர்த்தலும் - (தன் இடத்தோள் மிசை) ஒளி பொருந்திய தோமரம் படையை வீசித் (தேவாந்தகன்) பேரொலி செய்த உடனே; கனல் ஆம் எனச் சுளித்தான் - தீ ஆகும்படி எனச் சினந்து; அடல் தோமரம் பறித்தான் திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான் - அந்த வலிமை மிகு தோமரத்தைத் (தேவாந்தகன் கையில் இருந்து) பறித்துத் திரிந்து இடியேறு எனும்படி பேரொலி செய்து; புடைத்தான் - (அந்தத் தோமரம் கொண்டு தேவாந்தகனைப்) புடைத்தான்; அவன் தடந்தேரொடு நெடுஞ் சாரதி புரண்டான் - அதனால் அவனுடைய பெரிய தேரோடு வலிமை மிகு தேர்ப்பாகனும் இறந்தான்; வானோர் முகம் மலர்ந்தனர் - (அது கண்டு) தேவர்கள் மகிழ்ச்சியால் முகம் மலர்ந்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the other hurled the blazing tōmaram and roared, he flared up like fire;
- he wrenched out the mighty tōmaram, wheeled round, roared like a thunderbolt
- and struck; the tall charioteer rolled over with the great chariot;
- he had conquered the power of women with their soft tresses, and the gods' faces bloomed.
What the poem says
When Tēvāntakaṉ strikes him and roars, Aṉumāṉ blazes up like fire. He pulls the tōmaram away, spins round with a thunderous shout and strikes back with it, and the demon's great chariot and its strong driver go tumbling over. The gods beam with delight.
Aṉumāṉ is described as one who has conquered desire for women, the inner enemy; his celibacy is a traditional source of his strength.