கம்பராமாயணம் 7942 · யுத்த 17.171
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சூலப்படை தொடுவான் தனை - சூலப் படையைக் கையில் கொண்ட தேவாந்தகனை; இமையாத முன் தொடர்ந்தான் - (அனுமன்) கண்ணிமைப்பதற்கு முன்னமே நெருங்கிப் போர் செய்யலானான்; ஆலத்தினும் வலியானும் - ஆலகால நஞ்சைக் காட்டிலும் வலிமை பொருந்திய தேவாந்தகனும்; எதிரே வந்து புகுந்து அடர்த்தான் - அவனுக்கு எதிரில் வந்து புகுந்து போரிட்டான்; காலற்கு இரு கண்ணான் - யமனுக்கு இரு கண்களைப் போன்றவனாகிய (அனுமன்); தன் கையால் - தனது கையினால்; அவன் கதுப்பின் மூலத்திடைப் புடைத்தான் - அந்தத் (தேவாந்தகனுடைய) கன்னத்து உயிர்ப் பாகத்தில் அடித்தான்; சிரம் மடித்தான் உயிர் முடித்தான் - அதனால் அவன் தலை தொங்கி உயிர் விட்டான்.
அனுமன் தேவாந்தகனைக் கன்னத்தில் அடித்துக் கொன்றான். கதுப்பின் மூலம் - கன்னத்து உயிர் நிலை என்க. இதனை இக்காலத்துப் பொய்க்கண் என வழங்குவர். தனை - இடைக்குறை, இமையாத - ஈறுநீண்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Before an eye could blink he closed with the one who took up a trident;
- and he who was deadlier than the Ālam poison came forward to meet him and pressed the fight;
- then he who was as two eyes to Death, with his own hand,
- struck him at the root of the cheek, ended his life, and his head drooped.
What the poem says
Tēvāntakaṉ grabs a trident, but Aṉumāṉ is on him before he can blink. The demon, deadlier than the cosmic poison, stands his ground, but Aṉumāṉ, called "the two eyes of Death" because he sees death into his enemies, slaps him hard on the vital spot at the base of the cheek, the temple. Tēvāntakaṉ's head slumps and he dies.