கம்பராமாயணம் 7943 · யுத்த 17.172
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அதிகாயனும் எதிர் கண்டான் - (தேவாந்தகன் இறந்ததை) அதிகாயனும் கண் எதிரே கண்டான்; கனல் ஆம் எனக் கனன்றான் - (அவன்) நெருப்புப் போலக் கொதித்து; புண்தான் எனப் புனலோடு இழி உதிரம் விழி பொழிவான் - புண்தான் என்று (கண்டோர்க்குத்) தோன்றுமாறு கண்ணீரோடு வழியும் குருதியை விழிகளில் சோரவிட்டவனாய்; இவன் உயிர் இப்பொழுது உண்டேன் - இந்த அனுமனுடைய உயிரை இப்பொழுதே அழிப்பேன்; ஒழியேன் என உரையா - செய்யாது விட மாட்டேன் என்று உரைத்து; திண் தேரினைக் கடிது ஏவு என - வலிய நம் தேரினை விரைவாகச் செலுத்து என்று (பாகனுக்குச் சொல்லி); அவன் நின்றான் சென்றான் - அந்த அனுமன் நின்ற இடத்துக்குச் சென்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Atikāyaṉ saw it before him and blazed up like fire;
- his eyes poured blood mixed with tears, as if they were wounds;
- saying, 'I have taken this one's life this very moment; I will not stop,'
- he cried, 'Drive the strong chariot fast!' and went to where that one stood.
What the poem says
Atikāyaṉ has watched his brother Tēvāntakaṉ die. Burning with fury and grief, he weeps tears of blood, so that his eyes look like open wounds. Swearing to take Aṉumāṉ's life on the spot, he orders his charioteer to drive at full speed to where Aṉumāṉ stands.