கம்பராமாயணம் 794 · பால 12.56

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வடங்களும் குழைகளும் வான வில் இடத்,
தொடர்ந்து பூங் குழல்களும் துகிலும் சோர்தர,
நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள்,
நெடும் தடம் கிடந்த கண் நீலமாலையே.

பொருள் · Meaning in Tamil

நெடுந் தடம் கிடந்த - பெரிய தடாகத்தில் கிடந்த; கண்நீலமாலை - குவளை போன்ற கண்களையுடைய நீலமாலை என்பவள்; வடங்களும் - (தன் கழுத்தில் பூண்ட) ஆரங்களும்; குழைகளும் - காதணியான குழைகளும்; வானவில் இட - வானவில்லைப் போலப் பல நிற ஒளிகளை வீசவும்; தொடர்ந்த பூங்கலைகளும் - உடுத்த உடையும்; குழலும் சோர்தர - மலரணிந்த கூந்தலும் அவிழ்ந்து சரியவும்; நுடங்கிய மின் என - துவண்ட மின்னல் போல; நொய்தின் எய்தினாள் - விரைவாக ஓடி வந்தாள்.

சீதைக்குத் திருமணம் நடக்குமாறு இராமன் வில் முறித்த செய்தியை விரைவில் தெரிவிக்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு சீதை இருக்குமிடம் வந்தாள் என்பது.

தோழியின் பெயர் நீலமாலை. வானவில் இடுதல் - இந்திரவில்லின் தன்மையவாய்ப் பலநிற ஒளி வீசுதல். ‘திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன் -

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Her necklaces and earrings throwing out rainbows,
  2. her flowing silks and her hair slipping loose,
  3. swift as a flickering flash of lightning she arrived:
  4. Nīlamālai, whose eyes were like lilies lying in a broad, deep pool.

What the poem says

The companion, Nīlamālai, comes running to Cītai, so eager to share the news that her clothes and hair come loose and her jewels flash with rainbow colours as she moves. She darts in like lightning.

Her name means "garland of blue lilies", echoed in the description of her eyes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṭaṅkaḷum kuḻaikaḷum vāṉa villiṭa,
toṭarnta pūṅ kalaikaḷum kuḻalum cōrtara,
nuṭaṅkiya miṉ eṉa noytiṉ eytiṉāḷ,
neṭun taṭaṅ kiṭanta kaṇ nīlamālaiyē.