கம்பராமாயணம் 795 · பால 12.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வந்து அடி - வந்ததும் சீதையின் அடிகளை; வணங்கிலள் - விழுந்து வணங்கவில்லை; வழங்கும் ஓதையள் - ஆரவாரம் செய்பவளும்; அந்தம் இல் உவகையள் - எல்லையில்லாத மகிழ்ச்சியுடையவளுமாகி; ஆடிப் பாடினள் - ஆடுவதும் பாடுவதும் ஆயினாள் (அதைக் கண்ட சீதை அவளை நோக்க), சுந்தரி - அழகானவளே; சிந்தையுள் மகிழ்ச்சியும் - உன் மனமகிழ்ச்சியின் காரணத்தையும்; புகுந்த செய்கையும் - (பெரு மகிழ்ச்சிக்குக் காரணமாக) நடந்துள்ள செயலையும்; சொல் - சொல்லுவாய்; என - என்று கேட்க; (அந்தத்தோழி சீதையை) தொழுது - வணங்கி; சொல்லுவாள் - கூறலானாள்.
தலைவியைக் கண்டவுடன் தோழி வணங்கவேண்டுவது முறையாகும். ஆனால் பெரு மகிழ்வால் அத் தோழி வணங்காமல் ஆடிப் பாடிக் கொண்டிருந்தாள். பின்னர்ச் சீதை அவளைக் கேட்கச் செய்தியைக் கூற முற்பட்டாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She came but did not bow at her feet; she was loud with cries,
- full of joy without end; she danced and sang;
- 'Tell me, lovely one, the joy in your heart and the news that has come,'
- said Cītai; and, bowing now, she spoke.
What the poem says
Nīlamālai is so excited that she forgets the courtesy due to her mistress and, instead of bowing at Cītai's feet, bursts into song and dance.
Cītai asks her what has made her so happy and what has happened. Only then does the friend remember herself, bow, and begin to tell the news.