கம்பராமாயணம் 7945 · யுத்த 17.174
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒரு தனி எம்பியைத் தலத்தோடு தேய்த்தாய் - (முன்பு நடந்த பழைய போரில்) ஒப்பற்றுத் தனித்த என் தம்பியாகிய (அக்ககுமாரனைத்) தரையோடு சேர்த்து அழித்து; ஒரு திறத்தால் நெடுமா கடல் - ஒப்பற்ற உன் வலிமையால் பெரிய கரிய கடலை; போய்த் தாவினை பிழைத்தாய் - போய்த் தாவிப் பிழைத்தாய்; கடல் புகுந்தாய் வாய்த்தானையும் மடித்தாய் - (இப்போது நடக்கும் போரில்) அரக்கர் சேனையாகிய கடலில் புகுந்து பொருதற்கு வாய்த்தவனாகிய தேவாந்தகனையும் உயிர் இழக்கச் செய்தாய்; அது கண்டேன் எதிர் வந்தேன் - அச்செயல் கண்டு உன் எதிர் வந்து உள்ளேன்; இன்று உனக்கு முடிவு ஆய்த்து ஆயது - இப்போது உனக்கு முடிவு (நெருங்கி) ஆயிற்று ஆயிற்று; அணித்தாக வந்து அடுத்தாய் - (அதனால்தான்) என்னை நெருங்கி வந்துள்ளாய்.
வாய்த்தான் - பொருதற்குக் கிடைத்தவன்; தேவாந்தகன். ஆய்த்து ஆயது - ஆயிற்று ஆயிற்று விரைவு பற்றி வந்த அடுக்கு. இதனை ஒரு பொருட் பன்மொழி என்பாரும் உளர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You ground my peerless younger brother into the earth; by some trick
- you leapt back over the great wide sea and escaped; now you entered the sea of our army
- and killed the one who met you there; I saw it, and I have come against you;
- your end has come, has come today; you have drawn near to me."
What the poem says
Atikāyaṉ lists his grievances against Aṉumāṉ. Long ago, when Aṉumāṉ first came to Ilaṅkai, he smashed Atikāyaṉ's younger brother Akkakumāraṉ into the ground and then escaped by leaping back across the ocean. Now he has plunged into the demon army and killed Tēvāntakaṉ.
Atikāyaṉ declares that Aṉumāṉ's end has arrived, repeating the word for emphasis, since he has come within reach.