கம்பராமாயணம் 7946 · யுத்த 17.175
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உனை இன்று அல்லது - உன்னை இன்றைக்குக் (கொன்றால்) அல்லது; நெடுநாள் ஒரு நாளினும் எதிரேன் - (இனிவரும்) நீண்ட காலத்தில் ஒருநாள் கூட எதிர்த்துப் போரிட மாட்டேன்; எமை ஒன்று அல்லது செய்தாய் - (நீ) எமக்கு ஒரு தீங்கு அல்லாது பல தீங்குகளைச் செய்துள்ளாய் (அதனால்); வென்று அல்லது மீளாத என் மிடல் வெங்கணை மழையால் - வெற்றி பெற்று அன்றி வீணாக மீளுதல் இல்லாத என்னுடைய வலிமை பொருந்திய கொடிய அம்புகளின் மழையினால்; இளையோனையும் உனையும் கொன்று அல்லது செல்லேன் - (இராமனுக்கு) இளையவனாகிய இலக்குவனையும் உன்னையும் கொன்றல்லது மீள மாட்டேன்; இது கொள் என்றனன் கொடியோன் - இதை (நீ மனதில் உறுதியாகக்) கொள்க என்று கூறினான் கொடியவனாகிய அதிகாயன்.
உன்னையும் இளையவனையும் கொன்றே மீள்வன் என்றபடி. கணை மழை - உருவகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If not today, I will never meet you again on any day in all the long time to come;
- not one wrong only have you done us; with the rain
- of my mighty, cruel arrows that never return without victory,
- I will not go back until I have killed both the younger one and you; take this as certain," said the cruel one.
What the poem says
Atikāyaṉ swears that this is the day of reckoning. Aṉumāṉ has wronged the demons many times over, and Atikāyaṉ will not leave the field until his arrows, which never fail to win, have killed both Aṉumāṉ and Ilakkuvaṉ, the younger brother of Irāmaṉ.